ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம்

ஒரு சில கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம்

சேப்பாக்கம் அரங்கம் காலியாகுமே தவிர , காவேரி உடனே பொங்காது. ஐபில் ஆட்டம் இன்னொரு நகரில் நடக்கும், இதில் யாருக்கு நஷ்டம்?

கிரிக்கெட் முக்கியமா விவசாயம் முக்கியமா என அது கேட்கின்றதாம்

அடேய் கிரிக்கெட்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டை விரட்டினால் மட்டும் விவசாயி பெரும் வாழ்வு வாழ்வானா?

இன்னொரு கோஷ்டி என்ன செய்யுமாம் , ஊட்டி அருகே கபினி நதியில் அணைகட்டுமாம்

காவேரியின் 28 துணைநதிகளில் ஒன்று கபினி, இந்த சிறிய நதியில் அணைகட்டினால் மொத்த காவேரியும் எப்படி கட்டுபடும் என்பதும் புரியவில்லை

ஆளாளுக்கு எல்லாம் ஒரு மாதிரியாக கிளம்பி திரிகின்றது

பவானி , நொய்யல், அமராவதி போன்ற காவேரியின் துணையாறுகள் தமிழகத்திற்குள்ளேதான் நிறுத்தபட்டுள்ளன, அவற்றை பற்றி இவனும் பேசவில்லை என்பது வரை நல்லது