காவேரிக்காக தமிழக நடிகர் நடிகைகள் இன்று போராட்டம்

காவேரிக்காக தமிழக நடிகர் நடிகைகள் இன்று போராட்டம்

அதாவது தமிழ் திரையுலகில் ஸ்ட்ரைக் நடக்கின்றது, படபிடிப்புகள் இல்ல்லாமல் எல்லோரும் கொட்டாவி விட்டுகொண்டிருக்கின்றார்கள். இதனால் போராடிவிட்டாவது வருவோமே என கிளம்புகின்றார்கள்

பொதுவாக திரையுலகம் போராட வரும்பொழுது நரி வளையினை விட்டு வருவது போல வரும், அரசின் நிலைப்பாடு இன்னபிற சிக்கல்கள், இங்கே போராடினால் கன்னட ரியாக்சன் எப்படி? சிலர் நாம் கன்னடராயிற்றே? வரலாமா? என மெல்ல நிதானித்துத்தான் வருவார்கள்

இப்பொழுது அப்படி வந்தாயிற்று

ஆனால் கவனியுங்கள், சங்கத்து பெயர் “தென்னிந்திய நடிகர்” சங்கமாம் ஆனால் இப்பொழுது போராடுவது தமிழக நடிகர் நடிகைகளாம்

தமிழகத்திற்கு போராடும்பொழுது அது தமிழ் நடிகர் நடிகையர் சங்கம் ஆகின்றது, ஆனால் சங்க விழா, கொண்டாட்டம், கட்டடம் என வரும்பொழுது அது தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிவிடுகின்றது.