IPL : தனியார் அமைப்பின் போட்டியினை ஏன் எதிர்க்க வேண்டும்
ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மேல் துப்பாக்க்கி சூடு நடந்தது
இது என்ன இலங்கை வீரர்களை குறிவைத்து சுட்டார்கள் என விசாரித்த பாகிஸ்தானிய காவல்துறை விஷயத்தை அமுக்கினாலும் உளவுதுறைகள் மோப்பம் பிடித்து விஷயத்தை வெளிகொண்டுவந்தன
விஷயம் வேறு ஒன்றுமல்ல, புலிகளின் அன்றைய பின்னடைவினை சமாளிக்க இலங்கையில் சில பரப்புகளை ஏற்படுத்த சிங்கள கவனத்தை திசை திருப்ப நடந்த விஷயம் அது
அப்படியானால் பாகிஸ்தானில் புலிகள் சார்பாக தாக்குதல் நடத்தியது யாரென விசாரித்தபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் இருந்த ஆயுதகடத்தல் இன்னபிற தொடர்புகள் வெளிதெரிந்தன
புலிகளுக்கு எதிராக உலகம் பொங்க இதுதான் முதல் காரணம்
அப்படி இங்கும் சிலர் கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து எதிர்க்கின்றார்கள். இவர்களுக்கும் யார் யாருக்கும் தொடர்பு என பின்புதான் தெரியும்
இவ்வளவிற்கும் ஐபில் என்பது அரசு நடத்தும் போட்டி அல்ல, பிசிசிஐ என்பது தனியார் அமைப்பு
அந்த தனியார் அமைப்பின் போட்டியினை ஏன் எதிர்க்க வேண்டும்
எங்கே அம்பானி, அதானி தொழில்களை இங்கே எதிர்கட்டும் பார்க்கலாம்
அட அவ்வளவு ஏன் டாஸ்மாக்கின் மூல நதியான அதிமுகவின் மிடாஸ், திமுக பினாமிகளின் மது ஆலை எல்லாம் இங்கே காவேரியினை விட பெரிதாக பாய்கின்றன
டோல்கேட்டை அடித்தவர்கள் அதனை உடைத்தால் என்ன?