எதிர்ப்பு தெரிவிக்க எத்தனையோ வழி உண்டு…


மஞ்சள் நிறம் இருக்குமிடம் வெற்றி, அதனை அடக்குவார் யாருமில்லை…
அகில இந்திய கவனத்தை ஈர்க்கவேண்டுமென்றால் டெல்லியில் 40 எம்பிக்களும் ராஜினாமா செய்யலாம், கொழுத்த சம்பளம் வாங்கும் எம் எல் ஏக்கள் பதவி துறக்கலாம்
தமிழக திரை நட்சத்திரங்கள் தங்களின் பத்ம விருதுகளை திரும்ப கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
இன்னும் ஏகபட்ட வழிகள் உண்டு
அதை விட்டு உள்ளே கிரிக்கெட் ஆடும் பொழுது வெளியே சாலையில் குட்டிகரணம் அடிப்பது ஒரு நாளும் கவனஈர்ப்பு ஆகாது
இவர்கள் செய்யும் கூத்துக்கு அகில இந்திய அளவில் “இவனுக ஒரு மாதிரி ஆட்கள் போலும், ஏ கன்னடனே சொட்டு நீர் கூட கொடுக்காதே” என்ற குரல் மட்டும்தான் உயரும்
இதே சென்னையில் நள்ளிரவில் தனியாக பைக்கில் சுற்றுவார் டோனி, சென்னையின் அபிமானம் அப்படி இருந்தது, இனி வருவாரா?
எல்லா மாநில கிரிக்கெட் வீரர்களும் ஆட, மொத்த இந்தியாவின் எல்லா மாநில மக்களும் பார்க்கும் போட்டியில் இப்படி அழிச்சாட்டியம் செய்வது, மற்ற மாநில மக்களுக்கு தமிழர் மேல் பரிதாபமோ கவனமோ கொண்டு வராது
முழு வெறுப்பினையே கொண்டுவரும், இது நிலமையினை இன்னும் மோசமாக்கும்
ஆக எதனை செய்யவேண்டுமோ அதனை செய்யபோவதில்லை, எதனை செய்து அகில இந்திய வெறுப்பினை சம்பாதிக்க வேண்டுமோ அத்தனையும் செய்வது, பின் தமிழன் புறக்கணிக்கபடுகின்றான் என அழுவது.
மறிக்கபட வேண்டியது சேப்பாக்கத்தின் அண்ணா சாலை அல்ல, கோட்டை வாசல். அதிமுக கட்சி தலமையகம்
டெல்லியில் அவர்கள்தான் கணிச எம்பிக்கள், இங்கு ஆளும் கட்சியும் அவர்கள்தான்
அவர்களை விட்டுவிட்டு வேறு யார் முன்னோ சர்கஸ் வித்தை காட்டுவார்களாம்…
“இது ட்ரெய்லர்தான்; இன்னும் மெயின் பிக்சர் காட்டவில்லை” : அங்கிள் சைமன்
இது வைகோ இவரைபற்றி சொல்ல வேண்டிய டயலாக் அல்லவா?
விரைவில் உங்களுக்கு புழல் சிறையில் மெயின் பிக்சர் காட்டபடும், டோன்ட் வொர்ரி
இயக்குநர் வெற்றிமாறன் நெஞ்சிலே மிதித்தது போலிஸ்
போலிசை விமர்சித்த “லாக் அப்” படம் எடுத்த இயக்குநர் என்றால் பார்த்தவுடன் போலிஸ் வணங்கவா செய்யும்?
அவர்களும் குறித்து வைத்திருக்கத்தான் செய்திருக்கின்றார்கள், நேரம் கிடைத்தவுடன் சாத்திவிட்டார்கள்.