கன்னடன் செய்தால் தவறு, தமிழர் துரோகம்.. அதையே கோவைகாரன், ஈரோட்டுக்காரன் செய்தால் ?
சத்யராஜ் கோவைக்காரர், அமராவதி, பவானி அணையினை திறந்து தஞ்சை மக்களுக்கு நீர் கொடுக்க சம்பதிப்பாரா என்றால் மாட்டார்
ஏன் தஞ்சைமக்கள் தமிழர் இல்லையா? இல்லை அமராவதி ஆற்றில், பவானி ஆற்றில் திருச்சிகும் தஞ்சைக்கும் உரிமை இல்லையா?
நிச்சயம் உண்டு, அமராவதி காவேரியின் துணையாறு. மழை காலத்தில் இன்றும் அமராவதியும் நொய்யலும் பவானியும் காவேரியிலே கலக்கின்றன
கன்னடன் என்ன செய்கின்றானோ அதனைத்தான் கோயமுத்தூர்காரனும் தஞ்சாவூர் காரனுக்கு செய்துகொண்டிருக்கின்றான்
இது பற்றி எல்லாம் அவர் பேசமாட்டார்
பாரதிராஜா தேனிக்காரர், வைரமுத்தும் அந்த பகுதி , எங்கே? அப்பகுதி அணையினை திறந்து ராமநாதபுரம் பக்கம் விட இவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்
ஆனால் மழைகாலம் மட்டும் வைகை ராமநாதபுரம் வரை வரும், மற்ற காலம் ஆண்டிபட்டி பக்கம் நின்றுகொள்ளும்
இதுபற்றி பாரதிராஜா பேசுவாரா? இல்லை
ஆனால் நாங்கள் தமிழர் , தமிழர் வாழ்வு என பெரும் பேச்சுக்களை பேசிகொண்டே இருப்பார்கள்
கன்னடன் செய்தால் தவறு. தமிழர் துரோகம், அதையே கோவைகாரன், ஈரோட்டுக்காரன், தேனிபக்கம் எல்லாம் செய்தால் கள்ள மவுனம்
இவர்கள் இத்தனைக்கும் தமிழர்கள்
யார்கிட்டடா விடுறீங்க டூப்பு…