வன்முறைக்கு ரஜினி விளக்கம் ….

இதே ரஜினி தளபதி படத்தில் எஸ்பியினை மிரட்டுபவராகவும், போலீஸை விரட்டி கொல்பவராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது
பொல்லாதவன் , பில்லா, பாஷா , ஜாணி போல் இன்னும் ஏகபட்ட படங்கள் வேறு இந்த பொன்னான போதனைக்கு எடுத்துகாட்டாய் இருக்கின்றன
சிஸ்டம் இப்படி சொல்லிவிட்டது, இனி மய்யம் நாயகன் படத்தில் சம்மட்டி தூக்கிய காட்சி எல்லாம் மறந்துவிட்டு இன்னும் என்னென்ன பேசுமோ?
வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து’ – ரஜினி காட்டம்
கண்டிப்பாக பேராபத்து , பாபா படபெட்டியினை முன்பு தூக்கிகொண்டு ஓடியது போல இனி இந்த காலா படம், எந்திரன் 2.0 பட தியேட்டர்களை எல்லாம் நொறுக்கி வன்முறை செய்தால் என்னாவது
அது நாட்டுக்கு ஆபத்தோ இல்லையோ ரஜினி வீட்டுக்கு பேராபத்து