குஷ்புவினை சிஎஸ்கே தூதராக நியமிக்க வேண்டும்
தலைவி குஷ்புவினை மட்டும் சிஎஸ்கேவின் விளம்பர தூதராக அமர்த்தி இருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்கும்?
தலைவியின் பாதுகாப்பு படை இவ்வளவு தூரம் பிரச்சினை பெரிதாக விட்டிருக்குமா?
அந்த சீனிவாசன் என்பவர் இனியாவது தவறை உணர்ந்து தலைவியினை சிஎஸ்கே அணியின் தூதராக அமர்த்தட்டும்
அதன் பின் ஒரு சிறு சத்தம் வரும்? ஒரு எதிர்ப்பு வரும்
சங்கம் தலைவிக்காக முழு பாதுகாப்பினை வழங்கி பூரண அமைதியினை கொண்டுவரும்
தலைவியினை தூதராக்கினால் அவரை எதிர்த்து குரல் கொடுக்க எவனும் வரமாட்டான், வந்தாலும் சங்கம் விடாது.
தலைவியினை தூதராக அமர்த்தாவிட்டால் சங்கம் ஐபிஎல் ஆட்டத்தை சும்மா விடாது.
இனி சென்னையில் ஐபில் அமைதியாக நடப்பது குஷ்புவினை சிஎஸ்கே தூதராக அமர்த்துவதிலே அடங்கி இருக்கின்றது