ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்? காவேரிக்கு அல்லவா?

சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் : செய்தி

தமிழக போராளிகளின் அழிச்சாட்டியம் காரணமாக ஐபில் வேறு நகரங்களுக்கு மாற்றபட்டாயிற்று, இதனால் போராட்டம் மாபெரும் வெற்றி என்கின்றனர் போராளிகள்

ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்?, காவேரிக்கு அல்லவா?

சரி காவேரி என்னாயிற்று?

அதைபற்றி யாரும் பேசகூடாது.

காவேரியில் இவர்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான். நிச்சயம் இவர்களால் காவேரியினை கொண்டுவர முடியாது என்பது அப்பட்டமாக தெரிகின்றது

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடக்கும் போராட்டம் கொஞ்சமும் டெல்லியினை பாதிக்கவுமில்லை, கன்னடனுக்கு நெருக்கடி கொடுக்கவுமில்லை

சம்பிரதாய போராட்டமாக முடிந்துகொண்டிருக்கின்றது