அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே… ஐபில் எல்லாம் விரட்டியாச்சி

அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே ஐபில் எல்லாம் விரட்டியாச்சி
சரி
மோடி வந்தார்னே, பூரா கருப்புகொடி மனுஷன் ஓடிட்டார்
சரி
அண்ணே ஹேஷ்டாக்ல உலகத்துல நம்பர் 1 ஆக்கிட்டோம்னே, உலகம் பூரா நமக்கு சப்போர்ட்
ம்ம்
சாதிச்சிட்டோம்னே, தமிழன்னா யாருண்ணு காட்டியாச்சி
நல்லது, காவேரி வந்துட்டா?
அட அது ஏண்ணே வரப்போகுது? வரும்போது வரட்டும்
போராட்டம் காவேரிக்குத்தானே
ஆமாண்ணே, போராடி அலற வச்சிட்டோம்ல
டேய் போராட்ட முடிவு என்னாச்சி
மாபெரும் வெற்றிண்ணே..
அப்போ காவேரி வந்துருக்கணும்ல அதுக்குத்தான போராட்டம்
அதெல்லாம் விடமாட்டானுகண்ணே கள்ளபயலுக, ஆனா போராட்டம் வெற்றிண்ணே
ம்ம் டேய் எதுக்கு போராடுவாங்க
என்னண்ணே சின்னபுள்ளதனமா? உரிமை மறுக்கபட்டால் பொங்கணும், கொதிக்கணும் . அதுக்கெல்லாம் மானம் வேண்டும், உங்கட்ட அதெல்லாம் இல்ல அதுனால பேசுறீங்க
மானம் இருந்தா உன் கிட்ட எல்லாம் பேசமுடியுமாடா? போராட்டம் எப்படி முடியும் சொல்லு
அலற வைக்கணும்ணே, உலகம் மிரண்டு நிக்கணும் அதுதான் போராட்ட வெற்றி
டேய் அது அறப்போராட்டமோ இல்ல ஆயுதபோராட்டமோ அடம்பிடிக்கிறவன பேச்சுவார்த்தைகாவது இழுக்கணும் அதுதான் போராட்ட வெற்றி
அப்படியாண்ணே?
இப்போ போராடி யார் பேசவந்தா? மோடி வந்தாரா?
இல்லண்ணே?
எடப்பாடி பழனிச்சாமி?
போங்கண்ணே அந்தாளு போலிஸ் வச்சி அடிக்காரு
சித்தராமய்யா?
அவர் ஏன்னே பேசப்போறார்
அப்போ ஒருத்தருமே பேச்சுவார்த்தைக்கு வரலை
ம்ம் ஒருத்தரும் இல்லண்ணே
பின்ன எப்படி போராட்டம் வெற்றி
உலகத்தையே திரும்பி பாக்க வச்சிட்டோம்னே
டேய் காவேரி வரணும்னு போராடுனியா, உலகம் பாக்கணும்னு போராடுனியா
காவேரி வரணனும்னு
வந்துட்டா?
இல்ல, பேச்சுவார்த்தை கூட இல்ல
பின்ன என்ன வெற்றி?
போராட்டம் வெற்றிண்ணே, நீங்க ஆரிய அடிவருடி அப்படித்தான் பேசுவீங்க
டேய் காவேரி?
அது எப்பவும் வரட்டும் , வராமலும் போகட்டும். போராட்டம் மாபெரும் வெற்றி, தமிழினத்தின் வெற்றி