உதயநிதியால் உதய சூரியன் உதிக்காமலே போகலாம்

Image may contain: 6 people, people smiling, people standing

கொண்டாட்டம் என்பதும், வாரிசுகளை அறிமுகபடுத்துவது என்பதும் வெற்றிக்கும் , ஆட்சிக்கும் பின்னால் வந்தபின் நடக்க வேண்டிய விஷயங்கள்

தாண்ட வேண்டிய நெருப்பாறு முன்னால் இருக்க, இப்பக்கம் நின்றுகொண்டு ஆனந்த‌ ஊளையிடுவது, முகஸ்துதி பாடுவது எல்லாம் கட்சியினை நெருப்பில் தள்ளிவிடும்

அவர்கள் குடும்ப நிறுவணம் தான் அது, சந்தேகமில்லை

ஆனால் சில விஷயங்களை காலம்பார்த்து, நேரம்பார்த்து செய்யவேண்டும்

இல்லாவிட்டால் திமுக மீது வெறுப்பே பெருகும்

திமுக நல்ல சித்தாந்தம் உள்ள கட்சி ஆனால் வாக்குவங்கி மிகபெரும்பான்மை என சொல்லமுடியாது, கூட்டணியின்றி ஆட்சிக்கு அது வந்ததில்லை

ஆக இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள் இருக்க இந்த உதயநிதியால் அது பின்னோக்கி செல்கின்றது

உதயநிதியால் உதய சூரியன் உதிக்காமலே போகலாம்