கவர்னருக்கு ஒரு நீதி, கலைஞருக்கு ஒரு நீதி?
அந்த பெண் நிருபர் கவர்னருக்கு பேத்தி மாதிரி என முட்டுகொடுத்து காப்பாற்ற நினைப்பவன் எல்லோரும் யார்?
முன்பு குஷ்பு அதே தாத்தா ஸ்தானத்தில் இருந்த கலைஞருடன் நடந்த கட்சி சந்திப்புக்களை எல்லாம் கடுமையாக கொச்சைபடுத்தியவன் தான்
முதிர்ந்தவயது கலைஞரை எப்படி எல்லாம் கொச்சைபடுத்தினார்கள்? தங்க தலைவி மனம் வருந்தும்படி எப்படி எல்லாம் இட்டு கட்டினார்கள்?
குமுதம் பத்திரிகை எல்லாம் அன்று ஆபாசத்தின் உச்சிக்கே சென்றது, மஞ்சள் பத்திரிகையாக அருவெருப்பாய் தெரிந்தது.
வட நாட்டு முதிர்ந்த கவர்னர் கன்னத்தை தட்டினால் பேத்தி முறை, ஆனால் 89 வயது கலைஞர் தள்ளி இருந்து குஷ்புவுடன் பேசினால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்
கவர்னருக்கு ஒரு நீதி, கலைஞருக்கு ஒரு நீதி?
