திரைப்படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு?

Image may contain: 1 person, text and close-up

ஒஹோ

இவர்கள் பல நூறு கோடியில் எடுத்தால் நாமும் பல ஆயிரம் கட்டி பார்க்கவேண்டுமாம், அவர்கள் சில கோடியில் எடுத்தால் நாம் சில்லறைகள் கொடுத்து பார்க்க வேண்டுமாம்

முதலில் படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு என்ற அறிக்கை வருமா?

200 கோடி தயாரிப்பு செலவு என்றால் நம்ப முடியுமா? அதற்கு கணக்கு வழக்கு என்ன?

நடிகன் சம்பளம் எவ்வளவு அதற்கு ஆதாரம் எல்லாம் வருமா?

அதை முதலில் சொல்லட்டும், இந்த உதவாக்கரை யோசனை எல்லாம் சொல்லட்டும்

சினிமா ரசிகனை எவ்வளவு கேணையனாக நினைத்தால் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்?

பில்லியன் டாலர்களை கொட்டி எடுக்கபடும் ஆங்கில படங்களை கூட சல்லி விலையில் பார்க்க முடியும் பொழுது, இவர்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற டிக்கெட் கொடுக்க்க வேண்டுமாம்

இதெல்லாம் ரசிகனை விஷால் வீடு தேடிசென்று அடிக்க வைக்குமே தவிர , கொஞ்சமும் பலனளிக்காது

உங்களுக்கெல்லாம் தமிழ் ராக்கர்ஸ்தான் சரி