நிம்மி லீக்ஸ்…

பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை
“அண்ணே, அந்த ஊமைச்சி வீடு எங்கண்ணே இருக்கு? விலாசம் இருக்காண்ணே விலாசம்..”
ஆடியோ வெளிவந்தது, அதில் “நான் கவர்னர் மீட்டிங்கில் இருந்தேன். அந்த ஹையர் அத்தாரிட்டி கவர்னர் அல்ல” என்றுதான் கணக்கு பண்ணும் பேராசிரியை நிம்மி சொல்லியியிருந்தார்
அதற்குள் ஓடோடிவந்து நிம்மி முகத்தை கூட நபார்த்ததில்லை என கவர்னர் சொல்கின்றார் என்றால் எவ்வளவு பதற்றம்?
நல்ல வேளையாக பதற்றத்தில் “நான்
நிம்மி முகத்தை மட்டும் பார்க்கவில்லை” என சொல்லி தொலைக்கவில்லை
10 ஆண்டு கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது : நிர்மலாதேவி
என்னது பத்து ஆண்டா? இனி பல முன்னாள் கவர்னர்களில் தூக்கம் கெட்டது.
இந்த சிவகாசி ஜெயலட்சுமி, சுச்சி லீக்ஸ் வரிசையில் இனி நிம்மி லீக்ஸ்
தமிழகத்தில் நிம்மி புயல் போலவே ஆந்திரத்தில் ஒரு புயல் கிளம்பிற்று
இந்த ஸ்ரிரெட்டி எனும் நடிகை ஆந்திர சினிமா உலகை அலறவைத்த சம்பமே முடியா நிலையில், டைரக்டர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா இளம்பெண்களை தவறாக பயன்படுத்தினார் என்ற சர்ச்சை வெடிக்கின்றது
சமூக சேவர்களும் களத்தில் குதிக்க பிரச்சினை பெரிதாகின்றது
ஆந்திராவிலும் தமிழகத்திலும் ஒரே நேரத்தில் புரோக்கர் புயல் அடித்து வெளுக்கின்றது
அட்சய திருதியினை முன்னிட்டு 10 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்றது : செய்தி
எதற்கெடுத்தாலும் இலுமினாட்டி சதி என குதிப்பவனை எல்லாம் இவ்வளவு பெரிய தொகைக்கு தங்கம் விற்றால் யாருக்கு லாபம் என்பதில் காணமுடியாது
இதுதான் இலுமினாட்டிகள் வியாபார சதி, ஆனால் இதுபற்றி எல்லாம் எவனும் பேசமாட்டான்