அமெரிக்காவின் வெற்றி, டிரம்பின் வெற்றி

Image may contain: 2 people

உலகிற்கெல்லாம் மாபெரும் நற்செய்தியினை நேற்றிரவு சொல்லிவிட்டார்கள், நிச்சயம் இது அமெரிக்காவின் வெற்றி, டிரம்பின் வெற்றி

உலகில் முதல் முறையாக ஒரு நாடு அணுசக்தி திட்டங்களை கைவிடுகின்றோம் என சொல்வது இதுதான் முதன் முறை

ஆம், வடகொரியா அப்படி அறிவித்தாயிற்று. கிழக்காசியாவில் இருந்த பெரும் ஆபத்து நீங்கிவிட்டது

1960க்கு பின் உலக நாடுகள் அணுஆயுதம் செய்வதை அமெரிக்கா சில இடங்களில் தடுத்தது, சில இடங்களில் தவித்தது

சிரியா, ஈராக் அணுவுலைகளை அடித்து நொறுக்கினார்கள், கடாபி முதல் நிலையிலே தூக்கபட்டார்

ஆனால் ஈரானை அவர்களால் வழிக்குகொண்டுவர முடியவில்லை, இந்நிலையில்தான் வடகொரியா அணுகுண்டை சோதித்தது

நிச்சயம் அது மாபெரும் ஆயுதம், என்ன விலை கொடுத்தாலும் அதனை கைவிடமாட்டார்கள் என உலகம் எதிர்பார்த்தபொழுதுதான் வடகொரியா இந்த மாபெரும் தியாகத்தை செய்திருக்கின்றது

என்ன நடந்திருக்கலாம்?

எந்த போருக்கும் தயார் என மார்தட்டி நின்ற வடகொரியா, அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரியினை சந்தித்தபின் , என் பேரு மாணிக்கன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ” என பாஷா ரஜினி சொன்னவுடன் கல்லூரி முதல்வர் நமக்கெல்லாம் அவர் அண்ணேன்டா என குனிந்து நிற்பார் அல்லவா? அப்படி குனிந்திருகின்றார்

வழக்கமாக அணுகுண்டு நாடுகள் சில சம்பிரதாய சாக்குபோக்கு சொல்லும்

முதலில் அணுகுண்டை பயன்படுத்தமாட்டோம், இன்னொரு நாட்டுக்கு கொடுக்கமாட்டோம், இனி சோதனை செய்யமாட்டோம் என்றெல்லாம் சொல்லி சமாளிப்பார்கள்

ஆனால் வடகொரியா நிபந்தனை இன்றி சரணடைந்திருக்கின்றது

அமெரிக்கா ஒரு நாட்டை வழிக்கு கொண்டுவருகிறதென்றால் இரண்டே விஷயம்தான் சாத்தியம்

ஒன்று பணம், இன்னொன்று மிரட்டல்

அதன் பணம் சாதித்த சாதனையினை காட்ட அருகில் இருக்கும் தென்கொரியா, ஜப்பான், தைவான் நாடுகளை காட்டி எங்களால் எப்படி புஷ்டியாக இருக்கின்றார்கள் பார்த்தயா? நாங்கள் சொன்னபடி கேள் நாளையே உன்னை உலக பணக்காரன் ஆக்குவோம் என சொல்ல முடியும்

அதன் ஆயுதமிரட்டலை காட்ட, அரபு உலகத்தையும் ஆபகனையும் காட்டமுடியும்

அதன் உளவுதுறை செயல்பட்டை காட்ட லிபியாவினை காட்டமுடியும்

அமெரிக்கா அப்படிபட்ட சக்திபடைத்த நாடு

நிச்சயமாக மிக நிதானமாக வடகொரியாவினை அணுகியிருக்கின்றார்கள், வர்த்தக போர் நடப்பதால் சீனாவும் அமைதி

ரஷ்யாவும் அமெரிக்காவுடன் நேரடி போரில் இறங்க நினைக்கவிலை, சிரியாவில் கூட அமெரிக்கா தாக்கியதும் அது போரினை தவிர்க்கவே நினைத்தது

தன் காலடியில் வடகொரியா அணுசக்தியோடு நிற்பதை அதுவும் விரும்பவில்லை போலிருக்கின்றது

எப்படி எல்லாமோ வடகொரிய அதிபர் வழிக்கு கொண்டுவரபட்டிருக்கின்றார்

டிரம்ப் தன் மாபெரும் சாதனை இது என தொடங்கிவிட்டார்

ஈரான் அணுசக்தி தயாரிப்பதை முந்தைய அரசுகளால் முடக்கமுடியவில்லை நானோ வடகொரியாவினை காதை பிடித்து வழிக்கு கொண்டுவந்தாயிற்று என பெரும் சந்தோஷம்.

அமெரிக்கா என்றால் என்ன? அதன் பொருளாதார தடைகள் என்றால் என்ன? என்பதை உலகம் புரிந்து கொண்டிருக்கின்றது.

உலகின் பெரும் சிக்கல் ஒன்று தீர்த்ததில் கிழக்காசிய நாடுகளுக்கு பெரும் நிம்மதி

இந்த நிம்மதி அரபு நாட்டு மக்களுக்கும் கிடைக்கட்டும், குறிப்பாக சிரியபகுதியில் கிடைக்கட்டும்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரட்டும்

அவரை முரடன் என்றார்கள், குடிகாரன் என்றார்கள். தம் மக்க்களை போரில் தள்ளி அழிவினை ஏற்படுத்தாமல் அவர்களின் நல்வாழ்விற்காக இறங்கி வந்திருக்கும் வடகொரிய அதிபருக்கு வாழ்த்துக்கள்

வடகொரிய குழந்தைகள் இனி அமைதியில் வளரட்டும், பகை விலகட்டும். பின்னொரு நாளில் இரு கொரியாக்களும் இணையட்டும்

வடகொரிய மக்களுக்கு சமாதான வாழ்த்துக்களை தெரிவிப்போம்