பாஜகவின் சைபர் பிராடு போட்டோஷாப்

Image may contain: text and outdoor

இந்த பாஜகவின் சைபர் பிராடு போட்டோஷாப் கொஞ்சம் அறிந்ததுதான் சீனாவின் குவாங்சூ நகரை அகமதாபாத் என சொல்லி சில படங்கள் வந்தபொழுதே அது புரிந்தது

சமீபத்தில் இந்தியா ஆசியாவில் சீனாவினை பின்னுக்கு தள்ளி உலகில் இரண்டாம் பொருளாதார வலலரசு ஆயிற்று என இவர்கள் சொன்ன‌பொழுதே தூக்கிவாரி போட்டது

அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், ஜப்பான் என பெரும் பொருளாதார கேந்திர வரிசையில் சீனாவும் இருக்கின்றது, இந்தியா அப்பக்கமே இல்லை

ஆனாலும் கொஞ்சமும் மனசாட்சி இன்றி அல்லது சிறுகுழந்தை பெட்ரோல் டேங்கை பற்ற வைத்ததுபோல் வைதது விட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

இப்பொழுதும் பாருங்கள் 2011ல் எகிப்து மல்லிகை புரட்சியில் அந்நாட்டு தாகீர் சதுக்கத்தில் கூடிய கூட்டத்தின் படத்தை காட்டி லண்டனில் மோடிக்கு கூடிய கூட்டம் என கொஞ்சமும் வெட்கமின்றி சொல்கின்றார்கள்

வெட்கம்தான் இல்லை ஆனால் சிரிப்புமா வரவில்லை, அதனை எப்படி மறைத்தார்கள்?

அதிலும் சீற்றம் வேறு..

இன்னும் என்னென்ன படங்கள் எல்லாமும் வரலாம், அதில் டிரம்ப் முதுகில் மோடி உப்புமூட்டை ஏறியும் இருக்கலாம்

புட்டீனும் , ஜப்பான் பிரதமரும் போட்டோஷாப்பில் மோடிக்கு பல்லக்கு தூக்கலாம்

உடனே இந்த பக்தாள் டிரப்பே சுமந்த மோடி, தலைவன்டா என ஆனந்த கண்ணீர் வடிக்கலாம்

 

Image may contain: crowd, sky and outdoor