காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில்

Image may contain: 1 person, smiling

அன்புமணி அடுத்த தேர்தலில் முதல்வராவார் என்பது மோடிக்கே தெரியும் : ராமதாஸ்

இது நடக்காது எனினும் யாரையோ மறைமுகமாக மிரட்டும் தொணி இருக்கின்றதல்லவா??

விஷயம் இதுவாக இருக்கலாம்

நான் பெற்றெடுக்காத பிள்ளை என ராமதாஸ் சொல்லும் காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கின்றார்

ஜெயா சர்ச்சைக்கு பின் அங்கு பல சிக்கல்கள், காடுவெட்டிக்கு வேறு எதிரிகள் அதிகம். இது போக பெரும் தொகையினை அப்பல்லோ தீட்டிவிடும் அபாயமும் உண்டு

இதனால் அப்பல்லோவினை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக இரு விஷயங்களை சொல்கின்றார் ராம்தாஸ்

முதலாவது அப்பல்லோவில் சிகிச்சையில் இருப்பது வருங்கால முதல்வரின் உடன்பிறவா சகோதரன், அவனை கவனமாக பார்த்துகொள்ளவும், பில் அதிகம் வரகூடாது அடுத்தது எங்கள் ஆட்சி ஜாக்கிரதை.

இரண்டாவது வருங்காலத்தில் மோடியுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் பாமக இருக்கின்றது.