கோஹினூர் வைரம் போல குஷ்பூ
தலைவிக்காக ஆறுகால பூஜையும், சங்கத்தின் அன்றாட பணிகளும் மிக நன்றாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சிக்கல் வந்தாயிற்று
அவர் பெயர் குஷ்பு இல்லையாம், நக்கத் கான் என்பதாம். ஆக சங்கத்து பெயரை மாற்றுவீர்களா என ஏகபட்ட கேள்விகள், குழப்பங்கள்
பெயரில் என்ன இருக்கின்றது?
தலைவி குஷ்பு தன் பெயரினை ஆணித்தரமாக நக்கத் கான் என சொல்லிவிட்டார். அவர் நக்கத் என்பது யாருக்கு தெரியாது?
“நீ ஒரு இஸ்லாமிய பெண், உன் பெயர் நக்கத்” என பக்தாள்ஸ் சொன்னபொழுது, “ஆமாம் நான் நக்கத் ,வேண்டுமானால் டிவிட்டர் பெயரை கூட அப்படி வைத்துவிடலாம்” என சொல்லிவிட்டார் தலைவி
அவர் எந்த பெயரை வைத்த்தால் என்ன? நமக்கு எந்நாளும் குஷ்பு
இந்த கோஹினூர் வைரம் எல்லோருக்கும் தெரியும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் அழைத்தார்கள்,
கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து ஷாஜகானின் மயிலாசனத்தில் இருந்தவரை அது பல பெயர்களில் அழைக்கபட்டது
“அரச வைரம்”, “வைரங்களின் ராணி” என்றேல்லாம் கொண்டாடபட்டது
நாதிர்ஷா டெல்லியினை பிடித்தபொழுது அதை கண்டு கோஹினூர் என்றான், அதாவது பாரசீக மொழியில் “ஒளி மலை”
பின்பு அதுவே நிலைத்துவிட்டது, இன்றுவரை அது அப்படித்தான் அறியபடுகின்றது
அதனால் பக்தாள்ஸ் என்னமும் சொல்லட்டும், தலைவியும் ஆம் நான் நக்கத் கான் என சொல்லட்டும்,
நமக்கு அந்த கோஹிநூர் வைரம் போல தலைவி எந்நாளும் குஷ்பு
நக்கத் என்றால் நறுமணம் என பொருள், அதை விடுங்கள். கான் என்றால் தலைவன் என்று பொருள். தலைவனுக்கு எல்லாம் தலைவனை அன்று செங்கிஸ்கான் என்றார்கள்
அந்த கான் என்ற வார்த்தை செங்கிஸ்கான் காலத்திலிருந்து பரவி பின்னாளில் இந்தியாவிலும் நுழைந்தது
குஷ்புவிற்கும் கான் என்ற வார்த்தை மிக பொருந்தும் , ஆம் அவரும் மாபெரும் தலைவி, அவர் நக்கத் கானோ செங்கிஸ்கானோ நமக்கு குஷ்பு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி பூ, 12 ஆயிரம் ஒருமுறை மலரும் பூ
குஷ்பூ என்பது தமிழ்பெயர் இல்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அற்புத பெண்மணியின் பெயர் குஷ்பூ என அருஞ்சொற்பொருளை மாற்றிவிடலாம், தீர்ந்தது விஷயம்
சித்திரா பவுர்ணமி கூட வருடா வருடம் வரும், ஆனால் குஷ்பு போல் இன்னொரு முகம் வரவே வராது.
கோஹினூர் வைரம் போல குஷ்பூவாகவே அவர் சங்கத்தாரால் கொண்டாடபடுவார் என்பது சங்கத்து முடிவு