சிரியா வேறு வகை
அமெரிக்காவின் முக்கிய குறியில் லிபியா, வடகொரியா, ஈரான் என மூன்று நாடுகளும் அமெரிக்காவின் குறியாக இருந்தன, காரணம் 3 நாடுகளும் அணுகுண்டு பெற தலைகீழாக நின்றவை
சிரியா வேறு வகை
இதில் வடகொரியாவின் அணு நுட்பமும், ஏவுகனை நுட்பமும் ஈரானுக்கு உதவியாக இருந்தவை என்பதால் வடகொரியா மேல் அவ்வளவு கோபம் இருந்தது
லிபியா விவகாரத்தை கடாபியினை கொன்று முடித்துவிட்டார்கள், இல்லை என்றால் இந்நேரம் கடாபியும் அணுசோதனை எல்லாம் நடத்தி இருக்கலாம்
இப்பொழுது வடகொரியா தன் தலைக்கு முழுக்கு போட்ட நிலையில் அமெரிக்காவின் முழு கோபமும் ஈரான் மேல் திரும்பிவிட்டது
ஒபாமா அதிபராக இருந்தபொழுது ஈரானுடன் அட்டகாசமான ஒப்பந்தம் செய்தார், ஈரான் அணுகுண்டு செய்ய கூடாது பதிலுக்கு அமெரிக்கா தடைகளை தளர்த்தும் என்ற ஒப்பந்தம் அது
இதுகாலம் அது நடைமுறையில் இருக்கின்றது
அமெரிக்கா ஈரானின் நலன்களுக்கு எதிராக திரும்பும்பட்சத்தில் இந்த ஒப்பந்தம் செல்லாது என சொல்லிவிட்டுத்தான் ஏற்றுகொண்டது ஈரான்
இப்பொழுது டிரம்ப் என்பவர் ஒருமாதிரியானவர் அல்லவா? ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என தன் அல்லக்கைகள் மூலம் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்
ஈரானுக்கு கண்கள் சிவக்கின்றது, அமெரிக்க ஹிட்லிஸ்டில் இப்போது இருக்க்கும் மிக முக்கியமான நாடு அது
டிரம்ப் இப்பொழுதெல்லாம் நாளோரு பாட்டுபாட ஆரம்பித்துவிட்டார், ஈரான் கைகளில் அணுஆயுதம் கிடைக்குமுன் முந்தவேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்
விஷயம் மறுபடியும் சீரியசாகின்றது
ஒபாமா எவ்வளவு பெருந்தன்மையானவர் என உலகம் பேச தொடங்கிவிட்டது. டிரம்பின் பெயர் சரிகின்