தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது

Image may contain: 1 person, smiling, standing

தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது

இப்பொழுதெல்லாம் பல மாணவர்கள் இளமையிலே பெரும் சாதனை செய்கின்றார்கள், கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு மாணவன் சில செயற்கைகோள் பாகங்களை செய்திருந்தான்

இப்பொழுது திருச்சி மாணவி ஓவியா அட்டகாசமாய் ஒரு மினி செயற்கைகோள் செய்திருக்கின்றார், அதற்கு அனிதா பெயரையும் சூட்டி இருக்கின்றார்

இந்த அமெரிக்கருக்கு வியாபாரம் சுயநலம் ஆனால் உலகெல்லாம் இருக்கும் அறிவுசெல்வங்களை அங்கீகரிப்பதில் அவர்கள் வித்தகர்கள்

எந்த அறிவினையும் என்ன விலைகொடுத்தும் வாங்குவார்கள், அல்லது ஏற்றுகொள்வார்கள்

அப்படி இந்த மாணவியின் கண்டுபிடிப்பினையும் அங்கீகரித்து விண்ணுக்கு அனுப்புகின்றார்கள்

(இம்மாணவி பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி ஏற்கனவே கலாம் எல்லாம் பாராட்டியிருந்தார் )

அம்மாணவியினை வாழ்த்துவோம், அவள் தமிழ்பெண் என்பதில் பெருமை அடைகின்றோம்

இது கலாமின் மண் , அண்ணாதுரை மயில்சாமி, ரவி அருணன் மண் என்பதை நிரூபித்த அப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

அவர் இன்னும் பல சாதனை படைக்கட்டும்