பிராமண எதிர்ப்பு என்பது மாயமான்
என்ன சொல்லிவிட்டோம் என்று தெரியவில்லை, நீ பிராமண வெறியன், கருப்புசட்டை போட்ட காவி சட்டை , நீ ஏன் கலைஞரை கண்டாய் என்றெல்லாம் பல மண்வாரி தூற்றல்கள்
கலைஞரை கடுமையாய் எதிர்த்த இந்திரா முதல் சோ ராமசாமி வரை கண்டபொழுது, அவரை நான் காண கூடாதா?
அட வைகோவினை விடவா பெரும் துரொகம் கலைஞருக்கு செய்தேன்?
என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆரிய கொடுமை தெரியாதா, உடன்கட்டை, குழந்தை திருமணம், தீண்டாமை என ஏகபட்ட விஷயங்கள்
இந்த உலக வரலாற்றை கவனித்தால் இப்படி அபத்தமாக பேசமாட்டார்கள்
உலகில் எத்தனையோ காட்டுமிராண்டி தனம் அக்காலத்தில் இருந்தது, நரபலி முதல் சதி எனும் உடன்கட்டை ஏறுதல், அடிமை முறை என ஆயிரம் விஷயம் இருந்தன
அது ஐரோப்பா முதல் ஜப்பான் வரை இருந்தது, ஒவ்வொரு பெயரில் இருந்தது, இங்கு மனுதர்மம், அரேபியாவில் யூத தர்மம், சீனாவில் அரச கட்டளை என ஏராளம்
அவ்வப்போது நல்லவர்களும் தோன்றி சீர்படுத்தினர். புத்தர் இயேசு, நபி என ஓவ்வொருவராக வந்து ஒவ்வொரு பழக்கமாக நிறுத்தினர்
நரபலி, மிருகபலி எல்லாம் புத்தரால் கட்டுக்குள் வந்தது, சிலுவை மரணம் இயேசுகாலத்திற்கு பின் நிறுத்தபட்டது
அப்படியே காலமாற்றத்தில் அடிமை முறையும் நிறுத்தபட்டது
இதுபோன்ற காலமாற்றம் இந்தியாவிலும் வந்தது. சதி எனும் உடன்கட்டை ஏறுதலை ராஜாராம் மோகன்ராய் போன்றோரே நிறுத்தினர், அவர் ஒரு பிராமணர்
இன்னும் குழந்தை திருமணம் முதல் தேவதாசி ஒழிப்பு வரை பல இந்துக்கள் குரல்கொடுத்தபின்பே வெள்ளையனால் சட்டமாக்கபட்டது
மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோரை விடு என சொன்ன வைத்தியநாத அய்யர் யார்?
காலம் மாற மாற எல்லாம் மாறும், புது புது தொழிலும் புது புது சிந்தனையும் வாழ்க்கை முறையும் மாறும்பொழுது எல்லாம் மாறும்
ஒரு காலத்தில் யூதரை விரட்டிய ஐரோப்பா இன்று அரவணைக்கின்றது
கருப்பரை ஓட விரட்டிய அமெரிக்கா அவர்களில் ஒருவரை அதிபராகவே ஆக்கியது
காலமாற்றம் எல்லாவற்றிலும் சாத்தியம்
ஒரு காலத்தில் நாசிசம் கொடிகட்டி பறந்த ஜெர்மன் இன்று அதனை மறந்து உலகோடு ஒட்டி இருக்கின்றது
இன்று யாரும் வெள்ளை நிறவெறி, ஹிட்லர் நாசிசம், யூத வெறுப்பு எல்லாம் பேசுவதில்லை
இங்கு மட்டும் என்றோ நடந்த பழங்கால கதைகளை காட்டி காட்டி அரசியல் செய்கின்றார்கள்
இன்னமும் செய்வார்கள்
நான் கருப்புசட்டை என்றோ, திமுக என்றோ, இந்த கட்சி, இந்த மதம் என்றோ எங்கும் பதிவு செய்ததில்லை, செய்ய போவதுமில்லை
எல்லா விஷயங்களில் உண்மை , பொய் என கலந்திருக்கும், சில உண்மைகளுக்கு வைரத்தின் பல முகங்கள் போல பல கோணங்கள் உண்டு
நெஞ்சுக்கு உண்மை, பொய் என தோன்றுவதை தைரியமாக சொல்வோம்
அய்யொ இப்படி சொன்னால் திமுக தொண்டர்கள் கோபபடுவார்களே, இப்படி சொன்னால் இவர்கள் பொங்குவார்களே என்ற தயக்கம் எல்லாம் எமக்கு தேவை இல்லை
எழுததொடங்கும் பொழுது இத்தனை ஆயிரம்பேர் வருவர் என எண்ணி தொடங்கவில்லை, மனதில் பட்டதை எழுதிகொண்டே சென்றேன் திரும்பி பார்த்தால் பலர் நிற்கின்றனர் நன்றி
அதற்காக இவர்களுக்காக இனி இப்படி எழுதவேண்டும் என்ற அவசியம் அறவே இல்லை
போகின்றவர்கள் போகலாம்
பிராமணர்களை நிச்சயம் முழுக்க வெறுக்க முடியாது, சுதந்திர இந்தியாவில் அவர்களும் பாதிக்கபட்டிருக்கின்றனர் அது உண்மை
இன்னும் பிராமணன், ஆரியம் என சொல்லிகொண்டிருப்பது வோட்டு அரசியலே அன்றி வேறல்ல
காங்கிரசையும் பாஜகவினையும் பிராமணன் என்ற பெயரால் எதிர்ப்போம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்
அவ்வளவு பிராமண வெறுப்பு உண்டென்றால் பிராமணன் ஆள்வது உண்மை என நம்பினால் ஒரு சோதனைக்கு அவர்கள் அத்தனை பேரையும் வெளிதள்ள்ளி யூதரை போல் தனிநாடு கொடுத்துபாருங்கள்
அது இஸ்ரேலை விட உயர்ந்து நிற்கும்
அப்பொழுது உணர்வீர்கள், ” இந்த நாட்டை பிராமணன் ஆளவில்லை, நம்மை நாமே அண்டுதான் நாசமாய் போயிருக்கின்றோம், அவனை ஆளவிட்டால் நன்றாகத்தான் இருக்கின்றது”
உங்கள் அயோக்கியதனமான அரசியலுக்கு ஏற்றபடி எம்மால் எழுதமுடியாது
பிராமண எதிர்ப்பு என்பது மாயமான், கற்பனையான பொய்களாலும் கில்லாடித்தனமான வாதங்களாலும் அது உயிர்வாழ்ந்துகொண்டிருந்தது
இப்பொழுது அது சாகின்றது, அது கதறிகொண்டு சாகும் ஒலி பெரிதாக கேட்கின்றது
இத்தனைகாலம் பொய்களால் கட்ட்பட்ட கோட்டை இடிந்துவிழும் பொழுது பேரோசை கேட்கத்தான் செய்யும் , காதுகளை பொத்திகொள்வது நல்லது