RSS காட்டி இங்கு அரசியல் செய்தால் அது திமுக‌

ஆளாளுக்கு RSS, NTK என கலாய்த்து கொண்டிருக்கின்றார்கள், நம் பங்குக்கு நாமும் சொல்லி வைப்போம்

ஹிட்லரின் நாசி கூட்டத்தை பார்த்து அதுபோல‌ இங்கு தொடங்பட்டது RSS

பிரிட்டன் அரசரிடம் ஒரு அமைப்பாக கோரிக்கை வைக்கும் இயக்கத்தின் இந்திய காப்பி காங்கிரஸ்

ரஷ்யாவின் கம்யூனிசத்தை பார்த்து இங்கு தொடங்கபட்டது திராவிட கழகம்

அந்த RSS காட்டி இங்கு அரசியல் செய்தால் அது திமுக‌

திமுகவினை காட்டி அரசியல் செய்தால் அதிமுக‌

இலங்கையில் எல்லோரையும் ஆயுதம் கொண்டு கொல்லவேண்டும் என்றே தொடங்கபட்டது LTTE

அவர்களை பார்த்து ஆயுதத்திற்கு பதிலாக எல்லோரையும் பேசியே கொல்ல வேண்டும் என தொடங்கபட்டது நாம் தமிழர்

நாம் தமிழரின் சில வருமானங்களை கண்டு பிறந்தது பங்குனி 17, வ.கவுதமன் கோஷ்டி இன்ன பிற‌

ஆக ஒரு பயலுக்கும் சொந்த சரக்கு இல்லை, எல்லா கும்பலும் வெளியூர் சரக்கிற்கு உள்ளூர் லேபிள் ஒட்டி ஏதோ சம்பாதித்து கொண்டிருக்கின்றது