கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகம்
4 ஆண்டுகள் ஆண்டாயிற்று, இன்னும் தங்கள் சாதனையினை சொல்லாமல் ராகுலையும் காங்கிரசையும் மோடி சீண்டிகொண்டே இருப்பதில் பலருக்கு எரிச்சல்
முக்கியமாக சிவசேனா இதில் கடும் அதிருப்தியில் இருக்கின்றது
ஏன் ராகுலுக்கு அகில இந்திய அளவில் அனுதாபம் தேடி வளர்த்துவிடுகின்றீர்கள்? அவருக்கான பெரும் கூட்டம் கூடியாயிற்று எப்படி சமாளிக்க போகின்றீர்கள் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தாயிற்று
மோடி கோஷ்டியோ எதையும் காதில் வாங்காமல் பைத்தியம் பிடித்த குரங்கிற்கு தேள்கொட்டிய கதையாக ராகுலையே சாடிகொண்டிருக்கின்றது
கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக திரும்பிகொண்டிருக்கின்றது என்கின்றார்கள்
எப்படி இறுதி நேரத்தில் அதிர்ச்சி கொடுக்கலாம் என பாஜக யோசிகின்றது
அநேகமாக தேர்தலுக்கு முந்தைய நாள் 4 டிம்சி திறக்க வைக்கும் நாடகம் நடக்கலாம்
மோடியின் காரணமில்லா குற்றசாட்டுகளால் ராகுலுக்கு இமேஜ் வளர்ந்துகொண்டே இருக்கின்றது
ஆக ராகுலை பிரதமராக கடும் உழைப்பில் மோடி இறங்கியிருப்பதால் காங்கிரசாருக்கு கடும் மகிழ்ச்சி
ஏன் தங்கள் சாதனை என மோடி எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்விக்கு பாஜக பக்கம் பதிலே இல்லை