மலேசிய வானொலியில் தந்தி டிவி ஹரிகரன்

காலையிலே மலேசிய வானொலியில் தந்தி டிவி ஹரிகரன் என்பவர் பேட்டி வழங்குகின்றார்

எதற்காக என்றால் மலேசிய பிரதமரின் ஆற்றலையும் அவரின் செயல்திறனையும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கின்றாராம்

அவர் மட்டுமல்ல பல தமிழக ஊடகங்கள் இதே வேலையினை செய்துகொண்டிருக்கின்றன‌

மலேசிய ஊடகங்கள் அவற்றின் பொறுப்பை உணர்ந்து உன்னத பணி ஆற்றுகின்றன , நாடு நன்றாய் இருக்கின்றது

தமிழகத்தில் வேலையற்றவன், திண்ணையில் தூங்குபவன், ஆமை வாயனை, அரை காசுக்கு ஆகாதவனை எல்லாம் பெரும் போராளி போல‌ பேட்டி எடுத்தால் எப்படி சமூகம் உருப்படும்??

காலம் வரை அடுத்த நாட்டு பிரபலங்களுக்கே வாய்பிளந்து வாழ்த்து சொல்லுங்கள், சொந்த நாட்டில் நல்ல அரசியல்வாதி இருக்கும் பக்கமே போகாதீர்கள். அல்லக்கைகளையும் பொய்யர்களையுமே வளர்த்துவிடுங்ங்கள், உருப்படும் தமிழ்நாடு.