தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தமிழர் கைக்கு வர வேண்டும்: பாரதிராஜா
ஏம்பா பாரதிராஜா
தமிழ்படங்களின் இப்போதைய பெரும் பைனான்சியர் யார்? அன்புசெழியன். அவரின்றி பெரும்பாலன படம் இல்லை
அவர் யார் பச்சை தமிழர்
பிரமாண்ட படங்களை தயாரிக்க வந்திருப்பது யார்?
லண்டன் தமிழர் சுபாஷ்கரன்
இப்படி பெரும் தயாரிப்பாளரும் , பைனான்சியரும் தமிழர்களாய் இருக்க இன்னும் தமிழ் திரையுலகத்தை தமிழனே ஆளவேண்டும் என நீர் சொல்லி கொண்டிருப்பதென்ன?
நீர் லூசா? இல்லை இன்னும் உம்மை விட்டு கொண்டிருப்பவர்கள் லூசா?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியா கைப்பற்ற வேண்டும் : பாபா ராம்தேவ்
ஏம்பா சாமி, அவ்வளவு தைரியம் என்றால் சீனாவிடம் இருக்கும் இந்திய பகுதிகளை கைபற்ற வேண்டும், கயிலாய மலையினை கைபற்ற வேண்டும் என சொல்லிபாரும் பார்க்கலாம்
எதை பேசினால் அடி உடனே விழுமோ அதை பற்றி எல்லாம் சாமி பேசாது
பிரபாகரனுடன் சேர்ந்து நான் ஆமைக்கறி உண்டதாக நகைச்சுவைக்காகக் கூறினேன் : அங்கிள் சைமன்
அட அந்த “நாம் தமிழர்” கட்சியே நகைசுவைக்காகத்தானே நடத்தபடுகின்றது.
அதில் அவரும் அவர் தும்பிகளும் செய்யாத நகைச்சுவை காட்சிகளா?
இதில் ஆமைகறி மட்டுமா நகைச்சுவை?
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தமிழர் கைக்கு வர வேண்டும்: பாரதிராஜா
தமிழக முதல்வர் பதவி இவர் சொற்படி தமிழன் கைக்கு வந்து பல விஷயம் கிழித்துவிட்டது, இப்பொழுது தயாரிப்பாளர் பதவிக்கும் அப்படியே சொல்ல போய்விட்டார்
பாரதிராஜாவினையும் மனநோய் ஆய்வுக்கு அனுப்புவது நல்லது.
பயங்கரவாதத்தை தூண்டும் விடியோ பார்த்தவரை பயங்கரவாதி என்று கூற முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
ஆம், இனி எல்லோரும் உற்சாகமாய் சன்னிலியோன் வீடியோ பார்க்கலாம், அந்த வீடியோ பார்த்ததால் நாமெல்லாம் சட்டபடி தவறானவர்கள் ஆகவே மாட்டோம்.