மோடியின் விளம்பர செலவு மட்டும் 4330 கோடியாம்

Image may contain: 1 person

மோடியின் சாதனை என மோடியின் குருட்டு பக்தர்கள் ஒவ்வொன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இதில் புள்ளிவிவரம் வேறு இம்சைகள்

அப்படி எல்லாம் இந்நாடு வளர்ந்துவிடவில்லை, நம்மை விட நன்றாக இந்நாட்டை கவனிக்கும் வெளிநாட்டவர்கள் ஒன்றும் சொல்லிகொள்ளும் அளவில் இல்லை என தலையினை அசைக்கின்றார்கள்

நிச்சயம் இந்த மாட்டுகறி, மதவாத சிந்தனைகள் இன்னும் ஏராளம் அந்நிய முதலீடுகளை பாதிக்கின்றது. இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு மத ரீதி, இன ரீதியான மோதல் வந்தால் என்ன செய்வது என அவை யோசிக்கின்றன‌

மோடி உலகெல்லாம் சென்று என்னை நம்புங்கள் என சொன்னாலும் உலகம் யோசிக்கின்றது

இந்திய அரசு குழப்பமான திட்டங்களை அறிவிக்கின்றது, ஒன்றும் உருப்படி இல்லை. அருண்ஜெட்லி தவிர சொல்ல கூடிய படித்த அமைச்சர்கள் யாருமில்லை, என்ன அமைச்சரவை இது என உலகம் ஒருமாதிரி பார்க்கின்றது

நேரு, இந்திரா, ராஜிவ் மன்மோகன் என மிக கற்ற பிரதமர்களை பார்த்த உலகிற்கு, ப.சிதம்பரம் முதல் பல மேதைகளை பார்த்த உலகிற்கு இந்த அரசும் அதன் அமைச்சர்களும் அவர்கள் அழிச்சாட்டியமும் மிக மாறுபாடாக தெரிகின்றது

இதனால் இந்திய வளர்ச்சி சரிகின்றது, இதுதான் உண்மை

புள்ளிவிவரங்களை சொல்பவர்கள் சொல்லிகொண்டே இருக்கட்டும், மோடியின் விளம்பர செலவு மட்டும் 4330 கோடியாம்

பின் ஏன் புள்ளிவிவரங்கள் வேகமாக வராது, ஆயிரம் கோடி இந்த அபத்த புள்ளிவிவரங்களுக்கு மட்டும் செலவழித்திருப்பார்கள் போலிருக்கின்றது