கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது

கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது

சித்தராமய்யா தேர்ந்தெடுக்கபடும்பொழுது ஒழுங்காக வேலை செய்த வோட்டு மெஷின் இப்பொழுது சரியில்லை என பலர் கிளம்புவார்கள்

மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள், இதற்கு காவேரியினை திறந்திவிட்டு சித்தராமய்யா தோற்றிருக்கலாம்

இனி காவேரிக்கு விடுதலை இல்லை…

ஆக இனி தமிழகத்தை தொடர்ந்து கன்னடத்திலும் பாஜக அதிகாரம்

இங்கு பழனிச்சாமி கிடைத்தது போல் அங்கு இனி குமாரசாமி கிடைக்கலாம்

இனி தமிழிசைக்கு சிக்கல், எங்கே காவேரி என கேட்டு துளைத்துவிடுவார்கள்..

 


கர்நாடக தேர்தல் முடிவிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக வந்து அதிகாலையே விழித்திருக்கும் S Prema எனும் பக்தருக்கு வாழ்த்துக்கள்

Pugal Machendran Pugal என்பவர் திருச்சி மலைகோவில் உச்சியில் நிற்கின்றார், ஏதும் கன்னடத்தில் பாஜக சொதப்பினால் அப்படியே குதித்துவிடும் முடிவில் இருப்பதாக அதிர்கார பூர்வமற்ற செய்திகள் சொல்கின்றன‌

மோடி மதி நாடார் என்பவர் முகத்தை மூடிகொண்டு இரு விரல்களிடையே தேர்தல் முடிவினை பார்த்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிகொண்டு திக் திக் நிமிடங்களை கடந்துகொண்டிருக்கின்றார்

இப்படி தமிழக பக்தர்கள் எல்லாம் கடும் எதிர்பார்ப்பில் இருக்க, தமிழிசை அக்கா லட்டு தட்டோடு கமலாய கதவின் பின் நிற்கின்றார்

பாஜக வென்றால் கதவு திறக்கபட்டு லட்டு வழங்கபடும், இல்லாவிட்டால் பின் வாசல் வழியாக கொட்டபடும்

பாஜக வென்று எங்கேனும் மகிழ்ச்சி கொண்டாட்டம் நடந்தால் அதில் தென்படும் எஸ்வீ சேகரை பிடிக்க மாறுவேடத்தில் போலிசும் திட்டத்தில் இருக்கின்றது