பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி
பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி
இதில் என்ன ஆச்சரியம்?
ஆர்.கே நகரில் கூட திமுகவிற்கு டெப்பாசிட் போனது
தமிழகத்தில் சில தொகுதிகளில் சில கட்சிகளுக்கு வேட்பாளராக நிற்க கூட ஆட்களில்லை அதில் எல்லா கட்சியும் அடக்கம்
இதில் கன்னடத்தில் பாஜகவிற்கு டெப்பாசிட் போனதில் என்ன மகிழ்ச்சி?
இங்கே தமிழகத்தில் மொத்த தொகுதியிலும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் தைரியம் யாருக்கு இருக்கின்றது
வைகோ, சைமன், விஜயகாந்த் என சிலர் அதை பரீட்சித்து பார்த்தனர்
இதில் யானை மிதித்து எறும்பு சாகுமா? நிச்சயம் சாகாது ஆனால் இதுமாபெரும் வெற்றி, யானை மிதித்தே நாங்கள் சாகவில்லை என சொல்லிகொண்டார் சைமன், தும்பிகள் மகிழ்ந்தனர்
வைகோ, விஜயகாந்த் இருக்கும் இடம் தெரியவில்லை
அதிமுக ஒரு மாதிரி ஆனால் திமுக கூட்டணி இன்றி தேர்தல் களம் வரவே வராது
ஏதோ தமிழகத்தில் எல்லா கட்சியும் எல்லா தொகுதியிலும் எல்லா தேர்தலிலும் டெப்பாசிட் வாங்குவது போலவும், கன்னடத்தில் மட்டும் பாஜகவிற்கு டெப்பாசிட் போனது போலவும் இப்படி ஒரு ஆனந்தம்
இந்த கவுண்டமணியிடம் செந்தில் சொல்வது போல “நீங்க 10ம் வகுப்பு பெயில்ணே, நா ஏழாவது பாஸ்ணே. பாஸ் பெருசா பெயில் பெருசா”