கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் : ஸ்டாலின்

கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் : ஸ்டாலின்

மிக மூத்த கட்சியான திமுக கமலஹாசனின் கூட்டத்திற்கு எல்லாம் அஞ்சுவது வேதனை

பொது இடத்தில் கூடுவோம், அதில் திமுக சாதனையினை விளக்குவோம், என கிளம்பும் சாதுர்யமில்லை

எவனாவது ஏதும் கேட்கமாட்டானா? அவனை பிடித்து வைத்து கதற கதற திமுகவின் சாதனையினை விளக்க வாய்ப்பு கிடைக்காதா என அரசியல் செய்தவர் கலைஞர்

ஒரு கேள்வியினையோ, ஒரு வாய்ப்பினையோ அவர் தவறவிட்டதில்லை

ஒருவனும் கேள்வி கேட்காவிட்டால், தானே கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதும் கில்லாடி அவர்

அவர் இல்லாத திமுக இம்மாதிரியான விஷயங்களில் தடுமாறுகின்றது

அவர் இருந்திருந்தால் பதில் இப்படி வரும்

“களத்தூர் கண்ணம்மாவில் கமலஹாசன் மழலையாக‌ அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என பாடிய காலங்களிலே உயிரைகொடுத்து சமூக நீதி காத்த இயக்கம் திமுக, அவர் திமுகவினரான எனது மடி, ராமசந்திரன் மடியில் வளர்ந்த குழந்தை …” என நீட்டி முழங்கினால் கமலஹாசன் கூட்டம் நடத்துவார்?

அலறி அடித்துகொண்டு ஓடமாட்டாரா?