முழுக்க பைபிளை படிப்பவன் பெரும் மூடன் ஆவான் : உதாரணம் டிரம்ப்

Image may contain: 1 person, suit

உலகில் இன்னொரு பெரும் போரை நடத்த வேண்டும் என விரும்புகின்றார் டிரம்ப், இனி உலக அமைதி என்பதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்

வடகொரியாவுடன் இனி பேச்சு இல்லை என அறிவித்துவிட்டார், அதன் மீது கடும் தடைகள் தொடருமாம்

அவர்களும் இறங்கிவந்து, தரையில் வீழ்ந்து பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னும் டிரம்ப் வடகொரியா சுத்தமாக அழியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார்

அப்படியே ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துவிட்டு அவர்களுடனும் சண்டைக்கு தயாராகின்றார்

ஈராக், ஆப்கன், பாகிஸ்தான் , கத்தார் என ஆப்கனை சுற்றி அமெரிக்க முகாம்கள் வலுபடுத்தபடுகின்றன, பெரும் யுத்தத்திற்கு தயாராகின்றன‌

ஆனால் ஜெர்மனும், ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கு ஆதரவாய் நிற்கின்றன‌

இந்த சிக்கலுக்கு மூலகாரணம் இஸ்ரேல்

ஈரான் வல்லமை பொருந்திய நாடாக இருப்பதும், சிரியாவில் கால்பதித்து இஸ்ரேல் எல்லைக்கு வந்திருப்பதும் இஸ்ரேலுக்கு மகா எரிச்சல் மற்றும் எச்சரிக்கை

அதை எப்படியாவது நொறுக்க வேண்டும் என கடும் முனைப்பில் இருக்கின்றது

ஈரானை நொறுக்க வேண்டுமென்றால் வடகொரியாவினை அடக்க வேண்டும், காரணம் ஈரானுக்கும் வடகொரியாவிற்கும் ரகசிய ஆயுத உறவு உண்டு

உறவென்றால் எப்படி?

ஈரான் பணம் கொடுக்கும், வடகொரியா ஏவுகனையும், அணுகுண்டு நுட்பமும் கொடுக்கும்

இதனால் இருநாடுகளையும் நொறுக்கி தள்ள கடும் கோபத்தில் அலையும் இஸ்ரேல் டிரம்பினை தூண்டிவிடுகின்றது

ஒரு கிறிஸ்தவ வெறியரான டிரம்ப், பைபிள் சொல்படி இஸ்ரேல் புண்ணிய பூமி அதை காப்பது தன் கடமை என கொஞ்சமும் யோசிக்காமல் வந்து நிற்கின்றார்

இதற்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர்களும் கிறிஸ்தவர்களே, ஆனால் அமெரிக்க எல்லை என்ன? எவ்வளவு அழிவுகள் உண்டாகும் என கணித்து இஸ்ரேலுக்கு கடிவாளம் இட்டபடி இருந்தனர்

டிரம்பிற்கு அதை பற்றி எல்லாம் கவலையே இல்லை..

முழுக்க பைபிளை படிப்பவன் பெரும் மூடன் ஆவான் என்பதற்கு இப்போதைய ஒரே உதாரணம் டிரம்ப்