டிரம்ப் ஒரு மாதிரியாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றார்

இந்த டிரம்ப் என்பவர் ஒரு மாதிரியாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றார்

உலகை குழப்புவது போல தன் காலடியில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகள் எனும் தென்னமெரிக்க நாடுகளை குழப்ப தொடங்கிவிட்டார்

பொதுவாக அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் பொருந்தாது. ஆரிய திராவிட யுத்தம் போல அவர்களுக்கு ஆங்கில ஸ்பானிஸ் போர்த்துகீஸ் பிரச்சினை

கூடவே பிரிவினை கிறிஸ்தவம் , கத்தோலிக்கம். ஆங்கிலம் லத்தீன் என பல மோதல்கள் உண்டு

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை தென் அமெரிக்க நாடுகள் பகிரங்கமாக ஆதரித்தன, காரணம் மதம்

அந்த அளவு மோதல் இருவருக்கும் உண்டு. தென் அமெரிக்க நாடுகளின் மிக பெரும் பலவீனம் சர்வாதிகார அரசுகள், குழப்பமான மக்கள். ஏறகுறைய தமிழ்நாட்டை போல‌

இப்படிபட்ட சூழலில் தென்னெமெரிக்காவில் அமெரிக்க பிடி அவ்வளவாக இல்லை, கியூபாவினை அடக்க போய் கென்னடியினை இழந்தபின் அமெரிக்கா ஒதுங்கி இருந்தது

இப்பொழுது டிரம்ப் குட்டையினை குழப்புகின்றார்

அதாவது அமெரிக்க அடிபொடிகளுக்கு நேட்டோ என்றொரு அமைப்பு உண்டு, முன்னாள் சோவியத்திற்கான அமைப்பு. அதனால் என்ன நடக்கும் என்றால் அதில் பங்கெடுத்த நாட்டில் எல்லாம் அமெரிக்க முகாம் அமையும், அமெரிக்கா பங்கெடுக்கும் யுத்தத்தில் அந்நாடுகளும் கலந்துகொள்ளும்

இதுவரை தென் அமெரிக்க நாடுகள் நேட்டொவில் இல்லை, அப்பகுதி போரற்று இருந்தது

முதன் முறையாக கொலம்பியா நேட்டோவில் இணையுமாம் , இனி தென் அமெரிக்காவில் அமெரிக்க ராணுவ முகாம் முதல் முறையாக அமைய போகின்றது

ஒருவழியாக லத்தின் அமெரிக்க நாடுகளின் அமைதியும் போயிற்று, இனி அங்கிருந்து பல குழப்பங்களை செய்வார்கள்

கனிம வளம் மிக்க நாடுகள் என்பதாலும், சீனா அங்கு முதலீடு செய்து சுரண்டுகின்றது என்பதாலும் ஓடி போய் நிற்கின்றது அமெரிக்கா

இனி அவர்கள் வணங்கும் மேரிமாதா தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்