வடகொரியா நிலை இப்படி என்றால் ஈரான் அசைவதாக இல்லை
டிரம்ப் முறுக்கி கொண்டு நின்றாலும் வடகொரிய விஷயத்தில் தென்கொரியாவிற்கு பலத்த யோசனை இருக்கின்றது. சனியன் டிரம்ப் இன்னும் 3 ஆண்டுகளில் போய்விடும் ஆனால் நமது நிலை அப்படியா? என்ன இருந்தாலும் பங்காளி அவன் உறவு முக்கியம் என வடகொரியாவுடான் பேச்சுக்கு சென்றுவிட்ட்டது
ரகசிய இடம் என மேம்பாலத்திற்கு கீழோ இல்லை பாழும் கிணற்றடியிலோ இரு அதிபர்களும் பேசியிருக்கின்றார்கள். அந்த டிரம்பை மண் அள்ளி போடு, நாம் ஒற்றுமையாய் இருப்போம் என முடிவெடுத்திருக்கின்றார்கள்
தென்கொரியாவின் வற்புறுத்தலால் வடகொரியாவும் அந்த டிரம்ப் சனியனை வந்து தொலைய சொல் என சொல்லிவிட்டது
இந்நிலையில் தமிழகத்து எச்.ராசா போல “நான் எப்பொழுது கிம்மை பார்க்கமாட்டேன் என சொன்னேன், நான் அப்படி சொல்லவே இல்லங்க்றேன்” என சொல்லிவிட்டு அவரை சந்திக்க வாய்ப்பு உண்டு என்கின்றார் டிரம்ப்
எச்.ராசாவின் பாதிப்பு அமெரிக்கா வரை சென்றாயிற்று
விரைவில் திட்டமிட்டபடி சிங்கப்பூரில் இருவரும் சந்திக்க வாய்ப்பு வருகின்றது
வடகொரியா நிலை இப்படி என்றால் ஈரான் அசைவதாக இல்லை
அணுஆயுதம் தயாரிக்காமல் இருக்கவே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தோம், அவர்கள் அதை முறித்தால்நாம் அணுகுண்டு செய்ய உரிமை உண்டு என பகிரங்கமாக சொல்கின்றது
ஈரானியர்கள் ஒரு மாதிரி ஆசாமிகள் என்பதால் அடுத்த அணுகுண்டு பாரசீகத்தில் வெடிக்கபடலாம்