குஷ்பூவின் கை ஓங்குகிறது, காங்கிரஸில் பரபரப்பு
தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நக்மா மாற்றம்; குஷ்பூவின் கை ஓங்குகிறது, காங்கிரஸில் பரபரப்பு
இதில் என்ன பரபரப்பு
நக்மா என்ன? அந்த ஐஸ்வர்யா ராய் தமிழக காங்கிரஸுக்கு வந்தால் கூட தலைவி முன்னால் தாக்குபிடிக்க முடியாது
நாம் எப்பொழுதும் சொல்லிகொண்டே இருந்தோம், தலைவி சாமான்யம் அல்ல, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு அவரின் தொண்டர்படையின் பலம் கொஞ்சம் அல்ல என சொல்லிகொண்டிருந்தோம்
அப்பொழுதெல்லாம் பலர் நகைத்தார்கள், சிரித்தார்கள்
இதோ எங்கள் தெய்வதை எதிர்த்த நக்மா ஓட விரட்டபட்டிருக்கின்றார், தலைவி தனிபெரும் சக்தியாகின்றார்
இனி அடுத்து ஓட அடிக்கபடுபவர் தெருநாவுக்கரசர்
ஆள பிறந்த எங்கள் ஆற்றலரசி அரியணை ஏற காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது
சங்கத்திற்கு மாபெரும் மகிழ்ச்சியினை கொடுத்த காங்கிரஸ் மேலிடத்திற்கு நன்றி
காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சங்கம் துணை நிற்கும் என சங்கத்தின் அறிக்கை தெரிவித்துகொள்கின்றது