முகநூல் மணிமேகலை Devi Somasundaram-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிச்சயமாக அவர் திராவிட அரக்கி. உண்மையான திராவிட கொள்கை என்றால் என்ன என்பதை அவரை தவிர யாரிடமும் படிக்க முடியாது
மிக தெளிவான கருத்துக்கள், தெளிந்த நியாயங்கள், குழப்பமில்லா விவாதங்கள், ஆணித்தரமான எடுத்துகாட்டுக்கள் என அவரின் பதிவுகள் சுவாரஸ்யமானவை
கொஞ்ச நேரம் பேசினால் நம்மையும் பெரியாரிஸ்ட் ஆக்கிவிடுவார் என்ற பயத்தில் அவரிடம் அதிகம் பேசுவதில்லை.
சில நேரம் அந்த ஐடி பெரியாரின் உண்மை தொண்டனான ஆனைமுத்து ஐயாவின் மறைமுக ஐடியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்ததுண்டு ஆனால் அவர் அல்ல
(ஒரு சிலர் சொல்வது போல அந்த மோகினியினை நம்பாதே, விஷ்ணு மோகினி வடிவில் வந்தது போல யாரோ ஒரு திராவிட கிழவன் பெண் ஐடியில் இருக்கின்றான் என்ற எச்சரிக்கையும் அவ்வப்போது வரும் என்பது வேறுவிஷயம்)
சொல்லும் கருத்துக்களை ஆதாரமாகவும் தைரியமாகவும் சொல்லும் தோழர் அவர். அவரிடமிருந்து நாமும் கற்றது ஏராளம், மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள வரும் கருத்துக்கள்
திராவிட அரக்கி, தமிழக தாடகை, முகநூல் மணிமேகலை Devi Somasundaram என்பவருக்கு இன்று பிறந்த நாள் , வாழ்த்துக்கள்
அவர் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மற்றும் பிரார்தனைகள்.
அவர் தீவிர பெரியாரிஸ்டாக இருக்கலாம் அதற்காக பெரியார் வழியில் முதிர்ந்த வயதில் திருமணம் செய்வேன் என அடம்பிடிப்பது எல்லாம் நியாயமில்லை
அவர் இந்த ஆண்டிலாவது திருமணம் செய்து திராவிட வள்ளுவன் கூறிய இல்வாழ்வில் நுழையட்டும்