அமெரிக்காவிடம் கிட்டதட்ட 7000 அணுகுண்டுகள் உண்டு
இந்த ஆண்டபரம்பரை, தலித்தியம் எல்லாம் தமிழகத்திலோ இந்தியாவில் மட்டும் என எண்ண வேண்டாம், ஒவ்வொரு இடத்திலும் அது ஒவ்வொரு வடிவத்தில் இருக்கின்றது
அது சர்வதேச அரசியல் வரை நீடித்திருக்கின்றது என்பதற்கு இந்த அமெரிக்க வடகொரிய விவகாரமே சாட்சி
அமெரிக்காவிடம் கிட்டதட்ட 7000 அணுகுண்டுகள் உண்டு, தயார் நிலையில் 2 ஆயிரம் குண்டுகள் இருப்பதாக தியரி
அவர்கள்தான் வடகொரியாவிடம் அணுகுண்டு இருக்க கூடாது என்கின்றார்களாம்
கிராமங்களில் தாழ்த்தபட்டவன் கத்தி வைத்திருந்தால் அரிவாள் வைத்திருக்கும் பண்ணையார் “உனக்கெல்லாம் எதுக்கு கத்தி? போட்ரா தூர” என்றால் எப்படி இருக்கும்
இங்கே பேசினால் தலித் உரிமை, அது இது என பொங்குவார்கள், பெரும் கலவரம் எல்லாம் ஆகும்
என் கத்தி என் உரிமை என ஆளாளுக்கு பொங்குவார்கள்
ஆனால் சர்வதேச அரசியலில் அப்படி எல்லாம் பொங்கமாட்டார்கள்
“ஆகட்டும் சாமி” என குனிந்து கும்பிட்டு சென்றுவிடுவார்கள், வடகொரிய விவகாரத்தில் அதுதான் நடந்தது
பொதுவாக இன்றைய உலகில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயம் இரண்டு, ஒன்று அறிவியில் கூடிய தொழில் இன்னொன்று பணம்
ஆக கல்வியுடன் கூடிய வியாபாரமும் பணமும் இருப்பவன் ஆளும் சாதி அது இல்லாதவன் எல்லாம் தாழ்ந்த சாதி
இதை தவிர வேறு சாதி இப்போதைக்கு இல்லவே இல்லை