வரி விதிப்பு சர்ச்சைகள் பெரிதாக டிரம்ப் தன்னிலை விளக்கம்

வரி விதிப்பு சர்ச்சைகள் பெரிதாக டிரம்ப் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார், இந்தியாவினை அவர் வேறுவிதமாக சாடுகின்றார்

இந்தியாவிலிருந்து நாங்கள் வாங்குவது வெறும் இரும்பு, அலுமினியம் அவ்வளவுதான், அதற்கு எங்கள் நாட்டில் முன்பு வரி இல்லை, எம்மக்கள் வாங்க முடிந்தது

ஆனால் நாங்கள் தொழில்நுட்பம் கலந்து உழைத்து செய்யும் பைக், மற்றும் இதர விஷயங்களை இந்தியாவில் விற்க செல்லும்பொழுது அந்த அரசு கடும் வரிவிதிக்கின்றது

இதனால் எங்கள் பொருள் விற்பனை ஆகவில்லை, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்களை போலவே நாங்களும் வரிவிதிக்கின்றோம் என கூலாக சொல்லிவிட்டார்

டிரம்ப் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை

இது எங்களின் தயாரிப்பு அதில் ஓரளவு வரியினை அரசுகள் விதிக்கலாம் மாறாக பெரும் வரி விதித்து எங்கள் பொருளில் அந்த அரசுகள் சம்பாதிப்பதில் என்ன லாபம்?

கொஞ்சம் யோசித்தால் டிரம்ப் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

டிரம்பின் இதே கேள்வியினை அரபு நாடுகளும் கேட்கலாம், அப்படி அவர்கள் கேட்டால் ஒவ்வொரு அரபு சுல்தானையும் கட்டி தழுவலாம்

எங்களிடம் சல்லி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை இந்தியாவில் பெரும் விலையில் விற்று இந்திய அரசு சம்பாதிப்பது என்ன மாதிரி செயல்? நாங்கள் என்ன பைத்தியகாரர்களா?

ஏன் எங்களுக்கு அந்த விலைக்கு,இந்தியாவில் பொதுமக்களுக்கு அரசு விற்கும் விலையினை பொறுத்து இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்க தெரியாதா?

நாங்கள் இந்தியாவில் பெட்ரோல் விற்கும் விலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயித்தால் இந்தியா தாங்குமா?

இப்படி மட்டும் கேட்டால் எப்படி இருக்கும்?

கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கின்றது, ஆனால் கேட்க மாட்டார்கள் காரணம் அவர்கள் சுபாவம் அப்படி

ஆனால் அமெரிக்கா என்பது சர்வ சக்திபடைத்த நாடு, வியாபாரத்தில் கரை கண்ட நாடு என்பதால் அட்டகாசமாக கேட்டுவிட்டார்க‌ள்

சொல்லமுடியாது,டிரம்பை தொடர்ந்து இனி அரபுநாடுகளும் இப்படி கேட்டுவிட்டால் இந்தியா நிலை ஆபத்துதான்