இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது
இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது
அதாவது ரத்தகண்ணீர் நாடகத்தில் மபொசியினை சாடி எம்.ஆர் ராதா அம்மா சாக வேண்டிய மபொசி இருக்க நீ செத்துவிட்டாயே என அழுததாக சொல்கின்றார்கள்
அப்படி எல்லாம் நடந்ததாக தகவல் இல்லை
ஆனால் தன் தாய் இறந்தபொழுது எம்.ஆர் ராதா இப்படி சொன்னார்
“என் தாய் இறந்துவிட்டார், சாக வேண்டிய ராஜாஜி எல்லாம் உயிரோடு இருக்கும்பொழுது , என் தாய் இறந்துவிட்டார்”
ராஜாஜியினை அப்படி சொன்ன ராதாவினை மறந்துவிட்டார்கள், காரணம் ராஜாஜி பின்னாளில் கலைஞர் காலடிக்கு வந்துவிட்டார்
ஆனால் மபொசி வரவிலை என்பதால் திமுகவினர் கட்டு கதைகளில் இறங்கி இருக்கின்றார்கள்.
ஆனால் அதே மபொசிக்கு சிலை எழுப்பியர் கலைஞர் என்பதை மட்டும் மறந்துவிடுகின்றார்கள்
மேல்சபை கலைக்கபட்டபொழுது மபொசி அதன் தலைவராக இருந்தார், “இயற்றமிழ் அறிஞர்” மபொசி தலைவராக இருக்கும் அவையினை கலைப்பதா என கலைஞர் கொதித்ததும் திமுகவினருக்கு தெரியவில்லை
இன்றைய திமுகவினருக்கு எதுவும் சரியாக தெரிவதில்லை ஸ்டாலினை தவிர என்பது மட்டும் புரிகின்றது