அடேய் மோடி சொம்புகளா
என்ன மோடி, நாமளும் 4 வருஷமா ஆள்றோம், அப்பெல்லாம் இல்லாமல் இந்தவருஷம் மட்டும் இந்திராவின் எமர்ஜென்ஸியினை அதிகம் பேசுகின்றீர்களே ஏன்?
அப்போழுதுதானே, இன்னும் சில மாதங்களில் நாம் எமர்ஜென்ஸி கொண்டுவந்தாலும் சரியாக இருக்கும். டாலர் ஏறி ரூபாய் தமிழக பாஜகவாக படுத்துவிட்டது, பெரும் குழப்பம் வரலாம், அதனால் முன்னமே சொல்லி வைக்க வேண்டுமா இல்லையா?
இந்திரா போலவா நாட்டுக்காக என்று எமர்ஜென்ஸி கொண்டுவருவீர்கள்? நம்புவார்களா?
அட அழுது ஆர்பரிச்சி, உருண்டு புரண்டு இது சத்தியமாக நாட்டுக்கான்னு நம்ப வச்சி கொண்டுவந்துருவேன் , நம்மகிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் கண்ணீர்தான”

அடேய் மோடி சொம்புகளா
இந்திய ரூபாய் வீழ்ச்சி அடையவில்லை, அதெல்லாம் பொய் செய்தி என உங்களை நீங்களே சமாதான படுத்திகொள்ளலாம் ,
அதை எம்மிடம் சொல்லவேண்டாம்
உங்களுக்கும் டைட்டானிக் கப்பல் மூழ்கும்ப்பொழுது பாட்டு பாடிகொண்டிருந்த இசை கோஷ்டிக்கும் ஒரு வித்தியாசமுமில்லை
பயவுள்ளைகள் நாடு மூழ்கும் பொழுதும் “மோடி வாழ்க..” என சொல்லியே மூழ்கடிக்கின்றன
“யோவ் நிதி அமைச்சரே, என்னய்யா டாலர் ஏறிகிட்டே போகுது, அவனுகளுக்கு என்ன வேணுமாம், பேசாம நம்ம ரூபாய் செல்லாதுன்னு சொல்லிருவோமா? செல்லாத நோட்டை எந்த டாலருக்கு மாத்த முடியும்னு பாத்திருவோம், மோடியா கொக்கா?
தல, நாம நேரடியா டாலரே செல்லாதுன்னு அறிவிச்சுருவோமா? தக்காளி கதறுவாம்ல
ம்ம்… அப்போ 5 ஆயிரம் பத்தாயிரம் நோட் அடிக்க ரெடி பண்ணுங்க, இன்னைக்கு ராத்திரியே பூசை போட்டுறலாம்
1 டாலர் 5 ஆயிரம் ரூபாய்னாலும் வாங்குறோம், நாட்டுல குவிக்கிறோம், இல்லண்ணா இங்கேயே டாலர் அடிக்கிறோம் மேக் இன் இந்தியான்னு””