மாபெரும் கொள்ளையன் ரொடோய்ன்

Image may contain: 1 person, suit

பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவன் ரொடோய்ன், அவனது தொழில், பொழுதுபோக்கு, பகுதிநேரம், சிந்தனை எல்லாமே கொள்ளை இடுவது

மாபெரும் கொள்ளையனான இவனை 2010ல் ஒருமுறை பிடித்து 25 வருட தண்டனையில் சிறையில் அடைத்தார்கள், 2013ல் சிறையினை உடைத்து தப்பினான்

பின் சும்மா இருக்கலாம் அல்லவா? சில கொள்ளைகள் அடித்து மறுமுறையும் சிக்கினான். திருடிய கை சும்மா இருக்காது

சிறைக்குள் இன்னும் சிலரை கெடுத்து மனதை மாற்றி இருக்கின்றான், அட்டகாசமான திட்டத்துடன் மறுபடியும் தப்பி இருக்கின்றான்

சிறைவிட்டு தப்பியவனை கொஞ்சதூரம் தள்ளி தயாராக இருந்த ஹெலிகாப்டர் மீட்டு சென்றிருக்கின்றது

உலக வரலாற்றில் மிக பிரபலமான சிறை உடைப்பாக இது இடம் பெற்றுவிட்டது

அவனை தேடிய காவல்துறைக்கு ஹெலிகாப்டர் மட்டும் கிடைத்திருக்கின்றது, அதை வைத்து யார் மீட்டார்கள் என்ற விசாரணை நடக்கின்றது

நெப்போலியன் வாழ்ந்த நாடுதான் பிரான்ஸ், ஆனால் இப்படிபட்ட ஜெகஜால கில்லாடிகளுமா வருவார்கள்? என ஐரோப்பா பிரான்ஸை ஒருமாதிரி பார்க்கின்றது

ஆனால் ஒரு சில அதிகாரிகளோ, அவன் நிச்சயம் அடுத்த கொள்ளை அடிப்பான், அப்பொழுது பிடிப்பது எளிது ஆனால் எப்படி சிறையில் பாதுகாப்பது என்பதுதான் தெரியவில்லை என புலம்பி கொண்டிருக்கின்றனர்