டிரம்ப் இப்பொழுது ஈரான் பக்கம் வந்திருக்கின்றார்

No automatic alt text available.

வடகொரியாவினை அடக்கிவிட்டதாக நம்பிகொள்ளும் டிரம்ப் இப்பொழுது ஈரான் பக்கம் வந்திருக்கின்றார்

ஈரான் அவ்வளவு எளிதில் அடங்கும் நாடு அல்ல, வடகொரியாவின் அமைப்பு வேறு, அதன் சூழல் வேறு

ஈரானின் பலமும் அதன் நட்பும் அதன் பலமும் வேறுமாதிரியானவை

சிரியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தோல்விக்கும், இஸ்ரேலுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கும் ஈரான் மகா முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது

ஈரானை அடக்கும் பொருட்டு கடுமையான பொருளாதார தடைகளை கொடுத்தாலும் ஈரான் அடங்குவதாக தெரியவில்லை, அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கைகளை கொடுக்கின்றது ஈரான்

ஈரான் மேல் போர் தொடுத்தால் மிக முக்கிய சிக்கல் ஈரானின் ஹோல்ம்ஸ் முனையில் உருவாகும், அரேபிய எண்ணெயின் கால்வாய் அது, அதனை ஈரான் மூடினால் ஒரு கப்பல் நகர முடியாது

குவைத், சவுதி, கத்தார் , அமீரகம் என ஒரு கப்பலும் ஈரானை தாண்ட முடியாது

அடிக்கடி அமெரிக்க கப்பல் அப்பக்கம் உளவு பார்க்க செல்வதும், ஈரான் கடற்படை அவர்களை விரட்டி அடிப்பதுமாக அடிக்கடி உரசிகொள்ளும் இடம் அது.

ஈரானின் மிகபெரும் பலம் அது, அதனால் யுத்தம் என வந்தால் கிட்டதட்ட அரபு பொருளாதாரத்தை அசைத்துவிட கூடிய முடிவில் இருக்கின்றது ஈரான்

இதனால் அமெரிக்கா ஈரானின் அணுஆராய்ச்சிக்கு எதிராக இருந்த நிலைப்பாட்டில் இருந்து மெல்ல மாறி, ஏவுகனைக்கு வந்து நிற்கின்றது

ஈரானின் ஏவுகனை திட்டத்தை நிறுத்தினால் அதன் பொருளாதார தடைகளை அகற்றுவோம் என இறங்கி வந்திருக்கின்றது

அணு ஆய்வில் இருந்து அமெரிக்கா ஏவுகனை தடைக்கு வந்திருப்பதை ஈரானும் புன்னகையோடு நோக்குகின்றது

ஏவுகனை இல்லா அணுஆயுதம் பலனளிக்காது, கூடுதலாக இஸ்ரேலை ஈரானால் தாக்க முடியாது என்பதால் அமெரிக்காவின் நகர்வு இப்படி இருக்கின்றது, ஈரானோ விடுவதாக இல்லை

இருவரும் மறுபடியும் முரண்டு பிடிக்கின்றனர், ஈரானை வழிக்கு கொண்டுவருவது அமெரிக்காவிற்கு அவ்வளவு எளிதல்ல‌