தமிழகத்திற்கு மோடி காட்டுவது மாபெரும் பெருந்தன்மை
தமிழ்நாட்டிற்கு மோடி வந்தால் “Go Back ” மோடி என கத்தினார்கள், கருப்புகொடி காட்டினார்கள். படுபயங்கர காட்சிகளை எல்லாம் நடத்தி விரட்டினார்கள், கருப்பு பலூன் வேறு ஹெலிகாப்டர் வரை அனுப்பினார்கள்.
திமுகவின் எதிரி அதிமுகவா பாஜகவா என தடுமாறினார்கள், நிச்சயம் பாஜக அல்ல என்பதை புரிந்து கொள்ள மறுத்தார்கள்
ஆனால் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்கின்றார் மோடி
குடியரசு தலைவர் அவசரமாக விசாரிக்கின்றார்
திமுகவினரின் முகங்கள் இப்போது எங்கு திரும்புமோ தெரியாது, ஆனால் மனசாட்சி உறுத்தும். நிச்சயமாய் உறுத்தும்
உண்மையில் தன்னையும், அமித்ஷாவினையும் “திரும்பி போ” என கத்தும் தமிழகத்திற்கு மோடி காட்டுவது மாபெரும் பெருந்தன்மை
அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றார் மோடி, ஆனால் அதை எடுத்து சொல்லி தமிழகத்தில் மோடியின் பெருந்தமையினை காட்ட ஒரு பாஜககாரனும் இல்லை
பின் தாமரை எங்கே இருந்து மலரும்?
தாமரை இலை நீர் போலத்தான் அது இங்கு ஒட்டாமல் இருக்கும்