திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம்
திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம் : செய்தி
இது மிக மிக கண்டனத்திற்குரிய செய்தி, இந்த முக ஸ்டாலின் என்பவரின் போக்கு கொஞ்சமும் சரி அல்ல, அரசியல் செய்வதாக எண்ணிகொண்டு வரவர தேச துரோகிகளுக்கு எல்லாம் குரல் கொடுக்க தொடங்கிவிட்டார்
விரைவில் அங்கிள் சைமனுக்கும் இவர் ஆதரவு தெரிவிப்பார் போலிருக்கின்றது
திமுகவின் திராவிட அரசியல் வேறு இந்த ஒருமாதிரி குழப்ப பிரிவினைவாதிகளுடன் கரம் கோர்ப்பது வேறு என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார்
புலிகளை ஆதரித்து கைகளை சுட்டுகொண்டதில் இருந்து அவர் மிக விழிப்பாக இருந்தார், 2009ல் இந்திய மாநில முதல்வராக கவனமாக நின்றார்
ஆனால் இந்த முக ஸ்டாலின் சறுக்குகின்றார், தேசிய கட்சிகளை, தேசியத்தை எதிர்த்து இன்னும் இங்கு அரசியல் செய்யலாம் என தப்புகணக்கு போட்டுகொண்டிருக்கின்றார்
ஏற்கனவே ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என சொல்லி சர்ச்சையில் சிக்கினார், ஆனால் ராகுல் அதையும் பொருட்படுத்தாமல் கலைஞர் அஞ்சலியில் கடைசிவரை நின்றார்
அப்படிபட்டவர்கள் மேல் கரியினை பூசுகின்றாரா ஸ்டாலின்?
இம்மாதிரி தேச விரோதிகள் மேல் திமுக கரிசனம் கொண்டால் அதன்மீதான பழைய வதந்திகள் உண்மையாகும்
எது?
அக்காலத்தில் இருந்தே அண்ணா அமெரிக்க கைகூலி என்ற பெயர் இருந்தது, பின் அது வலுபட்டது
ஆரம்பத்தில் புலிகளை விலக்கி வைத்த கலைஞர் பின் திடீரென புலிபக்கம் சாயும்பொழுது இவர்களுக்கான உத்தரவு எங்கிருந்தோ வருகின்றது என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தது
ராஜிவின் கொலையினை தொடர்ந்து கலைஞர் அதிலிருந்து விலகி படாத பாடுபட்டு தீரா பழியேற்று களங்கம் கழுவினார்
அதனால்தான் அவருக்கு ராணுவ மரியாதை முதல் டெல்லியில் அரைகொடி அஞ்சலி வரை இத்தேசம் கொடுத்தது
அதை எல்லாம் குழி தோண்டி புதைத்து மறுபடியும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு எனும் விபரீத அரசியலை கையில் எடுக்கின்றார் ஸ்டாலின்
திருமுருகன் காந்தி ஐரோப்பா எங்கும் சுற்றி வருவதும்,அவருக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பதும் சரியான விஷயங்கள் அல்லவே அல்ல
ஒன்று திராவிட பிரிவினைவாத கட்சியாக திமுக நிற்கட்டும் இல்லை தேசிய கட்சிகளுடன் இணைந்து வரட்டும், தந்திரமாக இரண்டிலும் இருப்போம் என்றால் அதை நிச்சயம் தமிழர் விரும்பவே மாட்டார்கள், முகம் சுழிப்பார்கள்
இது அவருக்கு மாபெரும் வீழ்ச்சியினை கொடுக்கும், அவர் இன்னும் திருந்தாவிட்டால் அல்லது ஏதோ மயக்கத்தில் இருந்தால் காலம் அதனை தெளிவிக்கும்