தோழர் நளினி சரவணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
முத்தமிழின் ஒரு வகை இயற்தமிழ், அந்த இயற்தமிழை பேசவேண்டியவர்கள் பேசினால் அற்புதமாக அமையும், தமிழின் இனிமையும் விளங்கும்
அந்த இயற்தமிழின் சில வடிவங்களில் ஒன்று செய்திகள் வாசிப்பது
ரேடியோவிலும், டிவியிலும் செய்திகள் வாசிப்பது என்பது ஒரு கலை, எல்லோராலும் முடியாது
வார்த்தைகளை நிதானமாக, அதே நேரம் உச்சரிப்பு பிழை இன்றி, தெளிந்தோடும் ஆற்றுநீர் போல் ஓடவிடுவது பெரும் விஷயம்
ஆல் இன்டியா ரேடியோவில் சரோஜ் நாராயண்சாமி, தூதர்ஷனில் ஷோபனா ரவி என சில பெரும் அடையாளங்கள் அதற்கு இலக்கணமாய் இருந்தன
முன்பு இலங்கை வானொலி அந்த விஷயத்தை அழகாக செய்தது. இன்று மலேசிய வானொலியும் தொலைகாட்சியும் அழகு தமிழில் கட்டி போடுகின்றன
தமிழகத்தில் நிலமை சுத்தமாக மாறிவிட்டாலும் ஒரு சிலரால் அச்செய்திகளை நல்ல தமிழில் சுத்தமான உச்சரிப்பில் கேட்கமுடிகின்றது
அந்த ஒரு சிலரில் ஒருவர் தோழர் Nalini Saravanan
அழகான தமிழுக்கு சொந்தக்காரர், கலைஞர் டிவி செய்தி வாசிப்பாளர்
கலைஞர் டிவி என்றதால் என்னமோ அந்த தமிழ் அவ்வளவு அழகாக அவரால் உச்சரிக்கபடுகின்றது, தேர்ந்த பயிற்சி அது
தோழர் Nalini Saravanan அவர்களுக்கு இன்று பிறந்த நாள், அழகு தமிழில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்
அவர் மிகசிறந்த ஓவியர் என்றும் அறியபடுகின்றார், ஆக சரஸ்வதியில் அருள் நாக்கிலும் கரங்களிலும் ஆசியாய் நிற்கின்றது
தோழர் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்