தமிழிசை அக்காவிற்கு எல்லாம் கொஞ்சம் மெதுவாகத்தான் புரியும் போல
தமிழிசை அக்காவிற்கு எல்லாம் கொஞ்சம் மெதுவாகத்தான் புரியும் போல
ஆம், கலைஞரின் அருமை பெருமை எல்லாம் இப்பொழுதுதான் புரிந்து, திமுகவினரே திகைக்கும் அளவு புகழ்ந்திருக்கின்றார்
கலைஞரின் அருமைகள் இப்பொழுது தெரிந்தது போல் முன்னமே தெரிந்திருந்தால் அக்கா நிச்சயம் திமுகவில்தான் இணைந்திருப்பார்
அட இனியும் என்ன?
இப்பொழுது கலைஞரின் பெருமை புரிந்துவிட்டதால் விரைவில் அக்கா திமுகவிற்கு வந்தாலும் ஆச்சரியமில்லை..
காவேரி கடைமடைக்கு நீர் செல்வதில் கால்வாய் சிக்கல் தவிர மீத்தேன் சிக்கலும் உண்டு என்கின்றன செய்திகள்
அதாவது மீத்தேன் எடுக்கும் பகுதிகளுக்கு காவேரி நீர் செல்லாதாவறு சில விஷயங்கள் நடக்கின்றது என்கின்றார்கள்
இதுபற்றி எந்த ஊடகமும் பேசவில்லை, எந்த பத்திரிகையும் சொல்லவில்லை
அப்பக்கம் இருப்பவர்கள் உண்மை நிலையினை சொன்னால் சங்கம் தெளிவுபெறும்
“வேலைவாய்ப்பு இல்லாததால் மக்கள் டிரம்ப், மோடி போன்ற தலைவர்களை ஆதரிக்கிறார்கள்” :ராகுல்
பாஜகவினருடன் பழகி பழகி ராகுலும் இப்படி அவர்களை போலவே ஆகிவிட்டார்
இதில் பரிதாபம் என்னவென்றால் அட்டகாசமாக திருப்பி அடிக்க பாஜகவினருக்கும் தெரியவில்லை
அக்கோவ் தமிழிசை
“மன்மோகன்சிங் ஆட்சியில் வேலை இல்லாத விரக்தியில் மக்கள் மோடியினை ஆதரித்ததை ராகுல் ஒப்புகொண்டுவிட்டார், காங்கிரஸ் ஆட்சி மோசம் என அவரே சொன்னபின் என்ன இருக்கின்றது?” என போட்டு தாக்க வேண்டாமா?