மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா
ராஜிவ் கொலையின் பொழுதே கொலையுண்ட ராஜகுரு போன்ற காவலர்களை போல, காயம்பட்ட சில காவலர்கள் உண்டு, அதன் பின் வழக்கை விசாரிக்கும்பொழுது சாகசம் செய்து இறுதியில் வாழ்வினை தொலைத்த Jebamani Mohanraj போன்றவர்களும் உண்டு
இதில் களத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா என்பவரும் ஒருவர்
அவர் அப்பொழுது பெண் காவலர், ராஜிவினை தனு நெருங்கும் பொழுது ஓடி சென்று தடுத்தவர் இந்த அனுசுயா. ஆம் களத்தின் நேரடி சாட்சி.
ஆனால் பெருந்தன்மையான ராஜிவ் அனுசுயாவினை பார்த்து தனுவினை அனுமதிக்குமாறு கையசைத்தார், தன் விதியினை தானே முடித்தார் ராஜிவ்
அந்த வெடிப்பில் தீயில் கருகினார் அனுசுயா
அந்த விசாரணையின் பொழுது வாழை இலையில் படுக்க வைக்கபட்டிருந்த அனுசுயா, விசாரணை குழுவினரிடம் தனுவினை தான் தடுத்ததையும், ராஜிவ் அவளை விட சொன்னதையும் அதன் பின் குண்டு வெடித்ததையும் சொன்னதே ராஜிவ் வழக்கின் பெரும் திருப்பம்
அப்பொழுது அனுசுயா கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் மறுக்க முடியாதது
அந்த எரிந்த கோலத்திலும் சொன்னார், நான் தனுவினை முன்பே தடுத்து அனுமதியில்லாதவள் மாலை போட விடாதவாறு அனுப்பி இருக்க வேண்டும்
அதையும் மீறி ராஜிவ் அழைத்தபொழுது கடமையில் நின்று அவளை தடுத்திருக்க வேண்டும், ராஜிவ் சொல்லுக்கு கட்டுபட்டது என் தவறு, அதில் தேச தலைவனை கடைசி கட்டத்தில் காக்க நான் தவறிவிட்டேன்”
எப்படியான வார்த்தைகள்?
தமிழக காவல்துறை ஏன் ஒரு காலத்தில் மாண்போடு இருந்தது என்றால் இப்படித்தான்
இன்று முகநூலில் சிலர் கிண்டலாக பார்க்கும் Jebamani Mohanrajஎன்பவரின் தியாகமும் சாகசமும் கொஞ்சமல்ல, திருச்சியில் அவர் புலிகள் மேல் நடத்திய என்கவுண்டரும், புலிகள் எங்கும் தாக்கலாம், போலிசாரை தாக்கலாம் எனும் அச்சுறுத்தலான நிலையிலும் அவர் தைரியமாக களத்தில் நின்றார்
இப்பொழுது அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என்கின்றார், அப்படி சொல்ல முழு தகுதியும் அவருக்கு உண்டு. நிரம்ப உண்டு
அவரை போலவே பாதிக்கபட்ட, குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த 16 குடும்பங்களுக்கும் உண்டு
இப்பொழுது ஒரு கும்பல் சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி, ராஜிவ் கொலையாளிக்கு ஒரு நீதியா என கிளம்பி இருக்கின்றது, இது மூளையினை வாடகைக்கு விட்டிருக்கும் நாம் தமிழர் கும்பலின் கூப்பாடு
முதலாவது சஞ்சய் தத்திற்கும், இலங்கையில் இருந்து வந்த 4 கொலையாளிகளுக்கும் வித்தியாசம் உண்டு
இவர்கள் 4 பேரும் இந்த யகூப் மேமன், கசாப் வகையறா. எல்லை தாண்டி கொலை திட்டத்தோடு வந்தவர்கள்
சஞ்சய்தத் என்பவர் குண்டு வைத்தவர்களை தன் வீட்டில் வைத்து சோறு போடவில்லை, சம்பவ இடம் வரை சென்று குண்டு வைப்பதை பார்த்து ரசிக்கவில்லை
அதன் பின் குண்டுவெடித்து பலர் சாகும் பொழுது பிரியாணி சாப்பிட வில்லை , அதன் பின் பாயாசம் வைத்து குடிக்கவில்லை
(ஆம், ராஜிவ் கொல்லபட்டபின் சிவராசன் கும்பலோடு நளினி ஆம்பூர் பிரியாணி உண்டதும், இரு நாள் கழித்து சுபா பாயாசம் செய்து கொண்டாடியதும் விசாரணையில் தெரிந்தது)
சஞ்சய்தத் தான் போதை பழக்கத்திற்கு அடிமையானதை ஒப்புகொண்டார், அந்த தொடர்பில் சில ஆயுதங்களை தன் வீட்டில் வைக்க சிலர் தன்னை பயன்படுத்தினர் என்பதை ஒப்பு கொண்டார்
எந்த இடத்திலும் மறைக்கவில்லை
ஆனால் நளினி, பேரரிவு கும்பல் இன்னனும் நாங்கள் நிரபராதி என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றன
இந்த அனுசுயாவின் நிலை பரிதாபமானது, எந்த குண்டுவெடிப்பில் அவர் சாவின் விளிம்பு வரை சென்றாரோ, அந்த குண்டுவெடிப்பிற்கு துணை போன நளினியின் காவலாளி அவர்தான்
நளினி பிரசவம் நடக்கும்பொழுது அனுசுயாதான் காவல்
எப்படி இருந்திருக்கும் அனுசுயாவிற்கு? எப்படி எல்லாம் துடித்திருப்பார்
பாதிக்கபட்ட அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என சொல்லும்பொழுது எப்படி மறுக்க முடியும்?
அவரின் வலி அவருக்குத்தான் தெரியும்
இப்படி பாதிக்கபட்டவர்கள் பேச தொடங்கி இருப்பது நல்ல விஷயம், இன்னும் புலிகளால் பாதிக்கபட்ட குடும்பம் ஏராளம் உண்டு
உறுதியாக சொல்லலாம் அனுசுயா போல பாதிக்கபட்டவர்தான் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள், அதில் சந்தேகமில்லை
ஆனால் தாய்பாசம் மகன் செய்த குற்றத்தையும், அந்த வழக்கிற்காக புலி பினாமிகள் செலவழிப்பதனால் உள்ள நன்றிகடனும் அவரை பேச விடவில்லை
அனுசுயா பேசிவிட்டார், அற்புதம்மாள் தாய்பாசத்திலும் நன்றிகடனிலும் தள்ளாடுகின்றார்
அனுசுயாவும், அற்புதம்மாளும் புலிகளால் தீரா சோகத்திற்கு உள்ளானவர்கள்
அனுசுயா போல எல்லா குடும்பமும் பேசட்டும் , குறிப்பாக நெல்லை மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவரும் ராஜிவோடு செத்தவருமான ராஜகுரு குடும்பத்தாரும் பேசட்டும்
வலிபட்டவர்கள் சொன்னால்தான் பல விஷயங்கள் சரியாக வரும்

————————————————————————————————————————————-
“தம்பி ராகுல், அந்த 7பேரில் 4 பேர் இலங்கைக்காரங்க, இங்க அவங்களை விடுவிச்சாலும் அங்கதான் வரணும்
முருகனை கட்டிய வழியில் நளினியும் இலங்கைதான் வரணும்
வரட்டும் பார்த்துக்கலாம்…நாங்கெல்லாம் எதற்கு இலங்கையில இருக்கோம்
அதனால 7 பேரையும் விடுவித்தால் இலங்கை அரசிடம் ஒப்படைப்போம்னு சொல்ல சொல்லுங்க, தக்காளி எவன் தமிழ்நாட்டில வாய் திறக்கான்னு பாத்திரலாம்”
