ஈழ அழிவுக்கு காரணம் யார்
ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள்
இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார்
ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் இருந்தது
கலைஞரின் ஆதரவில் உண்மையான அபிமானமும் நியாயமும், நேர்மையும் ஈழம் அமைந்துவிடாதா என்ற முயற்சியும் இருந்தது
ஈழமக்களுக்காக மொத்த இந்தியாவினையும் திரட்டியவர் கலைஞர், ஆனால் பிரபாகரனை கண்டிக்காமல் அவனின் சகோதர கொலைகளில் மவுனம் காத்து டெசோ தலைவர்களான வாஜ்பாய், அப்துல்லா எல்லோரும் புலி இருக்கும் வரை ஈழம் உருப்படாது, டெசோ இயங்காது என சொன்னபொழுது கலைஞரின் டெசோவினை முறியடித்ததாக மகிழ்ந்தார் ராமசந்திரன்
அமிர்தலிங்கம் முதல் பலரை புலிகள் கொன்றபொழுதும் ஈழவிடுதலைக்காக புலிகளை கலைஞர் ஆதரிக்கத்தான் செய்தார்
கலைஞர் பாஷையில் சொல்வதாக இருந்தால் அது கடி நாய் என்றாலும் காவல்நாய் என சொல்லலாம்
ஆனால் சிக்கல் எங்கு முளைத்தது என்றால் அமைதிபடை அனுப்பபடும்பொழுது முளைத்தது
புலிகளால் வடமாரட்சி வளைக்கபட்டு முதல் முள்ளிவாய்க்கால் நடக்க இருந்தபொழுது இந்தியா நேரடியாக தலையிட்டு அமைதிபடையினை அனுப்ப முயற்சித்தது
பெரும் அறிவாளியான கலைஞருக்கு தொடக்கத்திலே பொறிதட்டிற்று, இது ஒருகட்டத்தில் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான மோதலாகும், இந்திய ராணுவத்தை புலிகளால் வெல்லமுடியாமல் போகும்பொழுது நிலமை சிக்கலாகும் என்றெல்லாம் யோசித்து அமைதிபடையினை அனுப்ப வேண்டாம் என்றார்
நிச்சயம் அது ராஜதந்திரமான முடிவு, அமைதிபடை செல்லாமல் சிங்கள அரசை இந்தியா ஆட்டிவைக்கும் முடிவு
அப்பக்கம் ராமசந்திரன் அற்புதமாக ஆடினார், இங்கே புலிகளிடம் இந்தியாவிற்கு அடங்காதே என்பார், அப்பக்கம் ராஜிவிடம் ஆட்சி எல்லாம் கலைக்க வேண்டாம், புலிகள் என்பேச்சை மீற மாட்டார்கள் என்பார்
இப்படியாக இருபக்கமும் அரசியல் செய்தவருக்கு உட்கட்சியில் புது சிக்கல் முளைத்தது, அதன் பெயர் ஜெயலலிதா
ஜெயலலிதாவினை ராஜிவ் வளர்த்துவிட முயன்றார், அவரை துணை முதலமைச்சர் ஆக்கு என சொல்லும் அளவு ராஜிவின் ஜெயா பாசம் இருந்தது
ராமசந்திரன் என்ன இருந்தாலும் கலைஞரிடம் அரசியல் பயின்றவர் அல்லவா? அவரும் அட்டகாசமாக ஆடினார்
அதாவது ஜெயாவினை நீர் தூண்டிவிட்டால் நான் தமிழகத்தில் புலி ஆதரவினை கையில் எடுப்பேன், கலவரம் நடக்கும் என புன்னகைத்தார்
இதில் கொஞ்சமும் ஈழநலமோ, ஈழமக்கள் நலமோ, போராளிகள் சாவோ ராமசந்திரனுக்கு கவலையே இல்லை
தன் ஆட்சி நிலைக்க வேண்டும், ஜெயா வளரகூடாது என்பதற்காக ஈழநலனை பலிகொடுத்து அமைதிபடையினை அனுப்ப சம்மதித்தார்,
ராஜிவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள் என பிரபாகரன் அழைத்தும் பண்ருட்டி ராமசந்திரனை விட்டுவிட்டு தப்பி வந்தவர் இந்த அதிமுக ராமசந்திரன்
கலைஞரோ அமைதிபடையினை அனுப்புவது ஈழ அழிவுக்கு சமம் என எதிர்க்க, ராமசந்திரனோ சத்தமே இல்லை காரணம் ஜெயாவிற்கான ஆதரவினை ராஜிவ் குறைத்தார்
அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது, திலீபன் மரணம், கொக்குவில்லில் இந்திய ராணுவம் தாக்க தொடங்கியபொழுது ராமசந்திரன் வாயே திறக்கவில்லை
அவரை யாரும் ராஜினாமா செய் என சொல்லவுமில்லை
அமைதிபடை புலிகள் மோத, ராமசந்திரன் ராஜிவோடு கைகோர்த்து நின்றார், ஜெயா ராஜிவ் அலுவலகத்தில் காவல் கிடந்தார். நடராஜன் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தார்
கலைஞரோ அமைதிபடையினை வாபாஸ் வாங்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போல பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார்
இந்நேரத்தில் ராமசந்திரன் மரணமடைய காட்சிகள் திரும்பின
அந்நேரத்திலும் கலைஞர் அமைதிபடையினை திரும்ப பெற சொல்லிகொண்டே இருந்தார், அப்பொழுது நடந்த தேர்தலில் கலைஞர் முதல்வரானார், சொந்த ராணுவத்தை புலிகள் கொல்ல புலிகளுக்கோ தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அளவு கலைஞரின் தேசதுரோகம் ஈழ ஆதரவும் இருந்தது
பத்மநாபா புலிகளுக்கு அஞ்சி சென்னை வந்தபொழுது பாதுகாப்பு கொடுக்க மறுத்தார் கலைஞர், தொட்டுவிடும் தூரத்தில் ஈழம் இருப்பதால் பத்மநாபாவினை வடக்கே போ என விரட்டிவிட்டார்
விபிசிங்குகு அழுத்தம் கொடுத்து அமைதிபடையினை மீட்டவர் கலைஞர், முதல்வராக இருந்தும் அதை வரவேற்க மாட்டேன் என சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தினார்
புலிகளின் செயல்பாடு தமிழகத்தில் அதிகமானது,பத்மநாபா கொல்லபட்டார், புலிகளின் கடத்தல் , இன்னபிற விஷயங்கள் உச்சம்பெற்றன
ராமசந்திரனுக்கு பின் வலுவான தலைவராக வந்த ஜெயா இதனை சாடினார், புலிகள் ஆதவிரனை கலைஞர் செய்கின்றார், அவர் அரசு கலைக்கபட வேண்டும் என ராஜிவ் மூலம் நெருக்கினார்
ராஜிவ்வால் சந்திரசேகர் அரசு கவிழ கலைஞர் அரசு ஆளுநர் அறிக்கை இன்றியே கலைக்கபட்டது, ஜனநாயக படுகொலை என்பது அதுதான்
அதன்பின் ராஜிவ் ஜெயா கூட்டணி ஏற்பட்டது, இது அமைதிபடையினை அடுத்து அனுப்பும் கூட்டணி என புலிகளே அஞ்சினர்
இந்த நேரத்தில்தான் ராஜிவ் கொல்லபட்டார், ஜெயா முதல்வரானார்
ராஜிவ் கொலையில் திமுக முக்கிய பங்கு என்ற கோணம் எழும்பி அது தடை செய்யபடும் அளவு சென்று மீண்டது
மீண்டதிமுகவினை புலிகளுக்காக கட்சியினை உடைத்து அழித்தார் வைகோ, பின்பலம் புலிகள். அவர்களுக்கு கலைஞர் முக்கியமே அல்ல வைகோவே முக்கியம்
கடிநாயானாலும் காவல்நாய் என கலைஞர் அணைத்த புலிகள் வெறிநாயாய் மாறியதை உணர்ந்த கலைஞர் ஒதுங்க தொடங்கினார்
ஜெயாவோ பிரபாகரனை தூக்கில் இடவேண்டும் என சொல்லிகொண்டே இருந்தார்
கலைஞரோ ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் திமுகவினை சிக்கவிட்டதால் அமைதி காத்தார்
இந்நேரத்தில் கலைஞரை புலிகள் தேடவே இல்லை, சுத்தமாக இல்லை
அப்படி ஒரு மனிதர் இருப்பதெல்லாம் அவர்களுக்கு படுகொலைகள் செய்யும் நேரத்தில் மறந்துவிடும், பின் அவர்கள் அடிபடும் பொழுது தேடுவார்கள்
அப்படி 2006ல் அடிபடும்பொழுது தேடினார்கள், 1991க்கு பின்
புலிகளை வெறிநாய் வகையில் இந்தியா வைத்திருந்தபொழுது கலைஞரால் மீறமுடியவில்லை
ஏற்கனவே பலமுறை புலிகளால் ஏமாற்றபட்ட கலைஞரால் இம்முறை அவர்களை நம்ப முடியவில்லை, அவர் என்ன புலிகளின் கடந்த காலத்தை அறிந்த யாரும் அவர்களை நம்பவில்லை
ஈழப்போர் சர்வதேச விவகாரமாக கலைஞர் கையினை விட்டு எங்கோ சென்றது, அவர் ஆட்சியினை இழந்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை
இதனால் திட்டமிட்டு அவரை பழித்தனர், அவரோ கண்டுகொள்ளவில்லை, உண்ணாவிரதம் என கிளம்பி புலிகள் சரணடைய அவகாசம் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை
ஆனால் வைகோ உள்ளிட்ட புலிகளின் ஆலோசனையால் பிரபாகரன் தவறாக முடிவெடுத்து எல்லாம் அழிந்தது
ஈழசிக்கலை 1991க்கு முன் 1987க்கு முன் என பிரிக்க வேண்டும், 1991க்கு பின் அது அழிந்துவிட்ட ஒன்று
இதில் திமுக 1991க்கு பின்பே புலிகளை கைவிட்டது, அப்படியும் 2009 வரை ஈழமக்களின் அநியாய சாவினை தடுக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்தது
இதில் அதிமுக 1987க்கு முன்பே அதாவது ராஜிவின் கடைக்கண் பார்வைக்காக, அன்றே அதாவது புலிகள் அடாவடியில் ஈடுபடுவதற்கு முன்பே சுயநலத்தால் ஈழமக்களை பலிகொடுக்க துணிந்தது
எப்படி பார்த்தாலும் திமுக இருமுறை ஈழ விவகாரங்களுக்காக ஆட்சி இழந்திருக்கின்றது, அமைதிபடைக்கு எதிரான புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்து தேசதுரோகம் செய்தது
அமைதிபடையினை வரவேற்காமல் ஆட்சி போனாலும் கவலை இல்லை என துணிந்து நின்றார் கலைஞர்
ஆனால் அதிமுக பக்கம் என்ன?
ஜெயாவினை நீ தொடாதே, அமைதிபடையினை நான் தடுக்கமாட்டேன் , ஈழம் எப்படி ஆனால் எனக்கென்ன என்ற ராமசந்திரனின் மாபெரும் பாதகமும். ஈழமக்கள் எப்படியும் சாகட்டும் முடிந்தால் ராஜிவும் சாகட்டும் நான் ஆட்சிக்கு வருவது முக்கியம் என்றிருந்த ஜெயலலிதாவும் கலைஞரிடம் இவ்விஷயத்தில் பக்கம் வரவே முடியாது
இதில் பட்டிமன்றம் வைக்க எல்லாம் அவசியமில்லை, திமுக புலிகளுக்கும் ஈழமக்களுக்கும் உதவி பெற்ற கசப்பான அனுபவம் அதிகமென்றால், அதிமுக புலிகளுக்கும் ஈழத்திற்கும் செய்த துரோகம் ஏராளம்
இது வரலாறு முழுக்க கிடக்கின்றது, இது தெரியாதவனே திமுக ஈழவிரோதி என சொல்லிகொண்டே இருப்பான். அந்த மாதிரி நபர்கள் அவனுக்கே எதிரி
எக்கோவ், டாக்டருக்கு படிக்க அனுப்பினால் நீர் தெருவில் இறங்கி போராடவா செய்தீர்? இதெல்லாம் அடுக்குமா
ஈழபோராட்டத்தில் பாஜக பங்கு என்றால் வாஜ்பாய் கூட டெசோவில் இருந்தார் என்றால் தீர்ந்தது விஷயம்
இதற்காக இவ்வளவு பெரிய பொய் எதற்காக
—————————————————————————————————————————————–
பேரறிவாளனின் வாழ்க்கையே வீணாகி விட்டது : அற்புதம்மாள்
ராஜிவ் உட்பட 17 பேர் வாழ்வே முடிந்தது, ஏராளமானோருக்கு படுகாயத்துடன் அங்கஹீனம் ஏற்பட்டது
அதெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத அற்புதம்மாளுக்கு தன் மகனின் வாழ்வு வீணானதுதான் கவலையாம், மகனாவது உயிரோடு இருகின்றான் என்ற எண்ணமில்லை
தன் மகன் யாரோடு பழகுகின்றான்? என்ன செய்கின்றான்? என்பது தாய்க்கு தெரியாதா?
அன்றே பேரரிவாளன் காதை திருகி, இந்த திராவிடம் பேசி திரியாதே, புலிகளோடு சேராதே என திருத்தி இருந்தால் இந்நிலை வந்திருக்குமா?
நாட்டுபற்று இல்லாத பொறுப்பற்ற பிள்ளையினை வளர்த்துவிட்ட குற்றவாளி அற்புதம்மாள், அவர் அழுகையில் பாசம் இருக்கலாமே தவிர உண்மை, நேர்மை என்பது துளியுமில்லை
—————————————————————————————————————————————–