சிதறல்கள்

மேடம் விஜயகாந்த் கூட “வல்லரசு” என்றொரு படம் நடித்திருந்தார், அதை பற்றியும் ஏதும் சொல்வீர்களா?

[ October 16, 2018 ]
Image may contain: 1 person, text
============================================================================

பெண்கள் பதற்றமாகவே இன்னும் இருக்கின்றார்கள், காந்தி கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை : கமலஹாசன்

நீர் இருக்கும் வரை எப்படி அய்யா பதற்றம் இல்லாமல் இருக்கும்? எப்படி காந்தி கனவு நிறைவேறும்? [ October 16, 2018 ]

============================================================================

“மெர்சல் படத்திலே பாஜக பற்றி தெரிஞ்சிபோச்சி, ஜெயலலிதாவுக்கு பயந்து இருந்த மாதிரி இனி இவங்களுக்கும் அடங்கி ஒடுங்கி இல்லண்ணா தம்பி விஜய் படம் வெளிவராது

எவ்வளவோ நடிச்சிட்டேன், இந்துவா நடிக்க மாட்டேனா என்ன?

தாமிரபரணி என்ன? கூவத்துல அவனுக இறங்க சொன்னாலும் இறங்கித்தான் ஆகணும், நிலமை அப்படி”

[ October 16, 2018 ]
Image may contain: 2 people, people smiling, people standing
==========================================================================

டாலரில் இருந்து கச்சா எண்ணெயினை ரூபாய்க்கு மாற்றுங்கள், விலையினை குறையுங்கள் என மோடி பேச தொடங்கிய உடனே சவுதி மறுத்திருகின்றது

நாங்கள் இல்லை என்றால் சவுதி அரசு இரு நாள் கூட நிலைக்காது என பகிரங்கமாக சொன்னவர் டிரம்ப், சவுதி நிலையும் அப்படித்தான் இருக்கின்றது

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா முகத்தை பார்த்துவிட்டே பதில் சொல்லும் நாடு சவுதி

டாலரை விட சொன்னால் விடுமா? மிஸ்டர் மோடி வி ஆர் சாரி என சொல்லிவிட்டு நடையினை கட்டிவிட்டது

இது சிக்கலான விவகாரம்

என்ன செய்யலாம் மோடி?

எண்ணெய் வள நாட்டில் முதலிடத்தில் இருப்பது ரஷ்யா, ஆனால் அதன் எண்ணெய் மிகதரமானது அல்ல ஆனால் பயன்படும்

இதனால் ரஷ்யா பக்கம் இந்தியா சாய்ந்துவிட்டு தரமான எண்ணெயினை ஈரானில் இருந்து வாங்கிவிட்டு டாலருக்கு பை பை சொல்லலாம்

ஆனால் ரஷ்ய எண்ணெயினை இந்தியா ஏன் வாங்க விரும்புவதில்லை என்பதுதான் மாபெரும் கேள்விகுறி

செய்ய வேண்டியது அதுதானே தவிர இந்த சவுதி, குவைத், பஹ்ரைனை எல்லாம் கெஞ்சினால் மிஞ்சி கொண்டேதான் இருப்பார்கள்

இந்தியா ரஷ்ய பக்கம் சாய்ந்தால் இவர்கள் கெஞ்சுவார்கள்

இந்தியா அந்த பயத்தை கொடுக்காமல் சும்மா டாலரை மாற்றுங்கள் என்றால் ஒரு அமெரிக்க அடிமை நாடும் கேட்காது [ October 16, 2018 ]

============================================================================

பில் கேட்ஸ் என்பவர் உருவாக காரணமானவரும், மைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் இட்டவருமான பால் ஆலன் மறைந்துவிட்டார்

உலகையே புரட்டி போட்ட கம்பெனி அது, அதை தொடங்கும் பொழுது பில்கேட்சுக்கு வயது 19 பால் ஆலனுக்கு வயது 22

அவர்கள் எழுதிய கணிணி நிரல்கள்தான் இந்த உலகம் இவ்வளவு சீக்கிரம் மாற காரணமான தலைவிதிகள்

அவர்கள் எழுதியதும், அவர்களுக்கு போட்டியாளர்கள் உருவாகி அவர்கள் உருவாக்கிய மென்பொருட்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன‌

அப்படிபட்ட மகத்தான பால் ஆலன் பின்பு பில்கேட்ஸை விட்டு பிரிந்தாலும் கணிப்பொறி உலகின் முக்கியஸ்தராகவே இருந்தார்

இனி அந்த பால் ஆலன் இல்லை, புற்றுநோய் அவரை பறித்துகொண்டது

இந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட கணிணி மனிதரில் அவர் முக்கியமானவர், கணிப்பொறியினை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்

ஆம், விஞஞானிகளும் ஏவுகனை மையங்களும் மட்டும் மிக கடினமாக பயன்படுத்திய கம்பியூட்டர்களை மிக எளிதாக்கி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்த்ததில் பால் ஆலனின் பங்கு முக்கியமானது

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். [ October 16, 2018 ]

Image may contain: 2 people, people smiling, beard and indoor
Image may contain: 1 person, smiling, eyeglasses
===========================================================================

உலகெமெல்லாம் வாக்கு அரசியல் தமிழ்நாடு போலவே இருக்கின்றது, சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலியா

அங்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்காக அந்நாட்டு பெரும் தலைவர் ஒருவர் நாங்கள் இங்கு வென்றால் ஆஸ்திரேலிய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றுவோம் என பகிரங்கமாக அறிவித்துவிட்டார்

விஷயம் என்னவென்றால் சம்பந்தபட்ட தொகுதியில் யூதர்கள் அதிகம், அவர்கள் வாக்கிற்காக இந்த மாபெரும் விஷயத்தை அசால்ட்டாக சொல்கின்றது ஆஸ்திரேலிய கட்சி

ஆக உலகெங்கும் மக்களாட்சியும் அதன் வாக்கு வங்கி தந்திரமும் ஒரேமாதிரித்தான் இருக்கின்றது [ October 16, 2018 ]

============================================================================

பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இப்பொழுது கோமாளி சண்டை உச்சத்தில் இருக்கின்றது

ஆனால் பாராளுமன்றத்தில் இரண்டாவதாக‌ அதிக எம்பிக்களை வைத்திருக்கும் அதிமுக கட்சி பற்றி எல்லோரும் மறந்து விடுகின்றார்கள்

அருண் ஜேட்லி ராகுலையும், ராகுல் அவர்களையும் மாறி மாறி கோமாளி என்கின்றார்கள்

இதில் ராகுல் பொய்யர் என்கின்றார் ஜேட்லி, நாங்கள் பொய்யான வாக்குறுதி கொடுத்துத்தான் வெற்றிபெற்றொம் என நிதின் கட்காரி சொன்ன அந்த கட்சியின் ஜெட்லி

ஆக பொய்யர் யாரென்றால் ஜெட்லிதான்

மிகபெரும் கோமாளிகள் யாரென்றால் இவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான்

[ October 17, 2018 ]
===========================================================================

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது – தர்மேந்திர பிரதான்

பின் என்ன ..க்கு பெட்ரோலிய துறையும் அதற்கொரு அமைச்சரும்? நேரடியாக அரேபிய ஷேக்குகளையும் அந்த 7 புகழ்பெற்ற வெளிநாட்டு எண்ணெய் கம்பெனிகளையும் விற்க சொல்லலாமே?

இப்படி எல்லாம் சொல்ல அரசு எதற்கு அமைச்சர் எதற்கு?

நாளுக்கொரு விலை வைப்பது இவர்கள், ஆனால் தலையிடமாட்டார்களாம்

மோடி அரசில் உண்மை பேச ஒருவருமா இல்லை?

[ October 17, 2018 ]

============================================================================

சில ஜாதகம் உலகில் பலருக்கு ஒரே மாதிரி இருக்கும் என்பார்கள்

சில்க் ஸ்மிதா – மர்லின் மான்றோ, இந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் – திமுகவின் முக ஸ்டாலின், தென்கொரிய பெண் பிரதமரும் அவர் தோழியும் – ஜெயாவும் சசிகலாவும்

என பலருக்கு ஒரே மாதிரியான வாழ்வும் ஜாதக அமைப்பும் உண்டு

அப்படி இரு மகா நடிகர்களுக்கு இந்தியாவில் ஒரே நேரத்தில் அமைந்திருக்கின்றது

ஒருவர் அகில இந்திய நடிகர், இன்னொருவர் தமிழக நடிகர்

இருவரும் ஒரே நேரத்தில் போராடினார்கள், 2000ம் வருட‌ வாக்கில் வாய்ப்பு பெற்றார்கள், முதலில் சுமார் ரகமே

ஆனால் 2010க்கு பின்பு இருவரின் காட்டிலும் அடைமழை, வாய்ப்புகள் குவிகின்றன‌, அதுவும் 2015க்கு பின் சுனாமி வேகம், கங்கை பிரவாகம்

சும்மா சொல்ல கூடாது, இருவருமே நடிப்பில் பின்னி எடுக்கின்றார்கள். எந்த வேடம் என்றாலும் அசத்துகின்றார்கள்

காமெடி, வெற்று வேட்டு மிரட்டல், சோகம், அழுகை, அடி வாங்குதல், முகம் வீங்குதல், உளரல் என இருவருக்குமே எல்லா பாத்திரங்களும் பொருந்துகின்றன‌

இருவரும் அனுதினமும் நடிக்கின்றார்கள், நடித்து தள்ளுகின்றார்கள். அவர்கள் நடிப்பிற்கு பெரும் கூட்டமும் உருவாகிவிட்டது

யார் அவர்கள்?

ஒருவர் நரேந்திர மோடி இன்னொருவர் விஜய் சேதுபதி

எல்லா தியேட்டர்களும், டிவிக்களும் இப்பொழுது விஜய் சேதுபதிக்காக அப்படியே எல்லா செய்திதாள்களும் ஊடகமும் மோடிக்காக‌

இவருக்கு தயாரிப்பாளர் பணம் பற்றியோ தியேட்டர் கட்டணம் பற்றியோ கவலை கிடையாது, அவருக்கு விலைவாசி பற்றியோ, பெட்ரோல் விலைபற்றியோ கவலை கிடையாது

சினிமாவிம் அசால்ட்டு வசனம் கெத்தாக பேசும் விஜய் சேதுபதி போல , டெல்லியில் பேசிகொண்டிருப்பார் மோடி ஆக இருவருமே கேமராமுன் கச்சிதமாக நடிப்பார்கள்

தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி லாபம் சம்பாதிக்கும் குதிரை, அம்பானிக்கு மோடி

இப்படி ஏக பொருத்தங்கள்..

இருவரின் ராசியும் ஒன்றாக இருப்பதால் அடுத்த ஆண்டிலிருந்து விஜய் சேதுபதி கவனமாக இருப்பது நல்லது [ October 17, 2018 ]

Image may contain: 1 person, closeup
Image may contain: 1 person, sunglasses
=====================================================================

உபியில் அலகாபாத் பிரயாக்ராஜ் என பெயர்மாற்றம் பெற்றது, 500 வருடங்களுக்கு முன்பு இருந்த பெயர் அது

ஆக உபி 500 வருடங்களுக்கு பின்னால் போய்விட்டது, விரைவில் 50000 வருடம் பின் சென்று ராமர் காலத்திற்கு செல்லும்

உபியினை மாற்றுவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் எப்படி மாற்றி கொண்டிருக்கின்றார்கள் பார்த்தீர்களா? [ October 17, 2018 ]

=========================================================================

விரைவில் டெல்லி அஸ்தினாபுரம் என மாறலாம் , அப்படியே மஹாபாரத பெயர்கள் எல்லாம் வட இந்தியா முழுக்க வரலாம்

இப்படியே இவர்கள் சுத்த சாமியார்களாக மாறி வெறும் வில்லும் அம்புமாக ஜெய் அர்ஜுனா என பாகிஸ்தான் எல்லைக்கு குதிரை தேரில் செல்லாதவரை இந்தியாவிற்கு நல்லது

ஆனால் இவர்கள் செய்வார்கள் போலிருக்கின்றது [ October 17, 2018 ]

============================================================================

இந்த உத்திரபிரதேச‌ யோகியினை பிடித்து வந்து கதற கதற தமிழ்நாட்டு முதல்வராக ஆக்கிவிடும் கடும் ஆக்ரோஷத்தில் பலர் உள்ளார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

தமிழ்நாட்டில் ஏன் தாமரை மலரவே மலராது என்பதும் நன்றாக புரிகின்றது

சும்மாவா தமிழிசை நோட்டா வேண்டாம் என்கின்றார், இவர்களுக்கு அஞ்சிதான்

[ October 17, 2018 ]

===========================================================================

திருச்சி விமான நிலையமே ஆட்டத்தில் இருக்கின்றது, ஒன்றும் சரியில்லை

மதுரை இன்னும் சர்வதேச விமான நிலையமாக இல்லை, இலங்கைக்கான விமானம் மட்டும் வருகின்றது, ஓடுபாதை சர்வதேச விமானம் வரும் அளவு பெரிதாக இல்லை

தூத்துகுடி விமான நிலையம் காற்று வாங்குகின்றது

இந்த லட்சணத்தில் ராதாபுரம் அருகே சுற்றுபயணிகளுக்காக விமான நிலையம் அமைக்க இந்த பொன் ராதாகிருஷ்ணன் இடம் தேடுகின்றாராம், ஒரே அழிச்சாட்டியம்

ஏதோ மைசூர் பக்கம் காவேரி விளைச்சல் பகுதியில் இடம் தேடுவது போல பெரும் பிம்பம். தேடல்.

அந்த வறண்ட காட்டில் ஏன் தேடவேண்டும்? கண்ணை மூடிகொண்டு கோடு கிழிக்கலாம்

அந்த வறண்ட காட்டினை சுற்றி பார்க்க யார் வரபோகின்றார்கள்? கன்னியாகுமரிக்கு வருபவர்களுக்கு திருவனந்தபுரம் இருக்கின்றது

இப்பக்கம் தூத்துகுடி இருகின்றது, பின் எதற்கு இடையில் இங்கு விமான நிலையம்? பெரும் போயிங் 937 , ஏர்பஸ் எல்லாம் வந்து இறங்க போகின்றதா?

கூடங்குள அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்காக ரஷ்யா விமான நிலையம் கேட்கின்றது என்பதை ஏன் இப்படி சுற்றி வளைக்க வேண்டும் மிஸ்டர் பொன்னார்? [ October 17, 2018 ]