புத்தமதம் – ஒரு பார்வை
ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்..
இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது
புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் இல்லை
அங்கேயும் சிக்கல் உண்டு. அசைவம் கூடாது, ஆசை கூடாது, இன்னபிற கூடாது என ஏக சிக்கல்
சமணம் இன்னும் ஒரு படிமேல், நடக்கும்பொழுது எறும்பை மிதிப்பாய் அதனால் மயிலறகால் கூட்டிகொண்டே நட எனும் அளவு ஜீவகாருண்யம்
புத்தமும் சமணமும் இந்நாட்டில் விடைபெற ஆரிய சூழ்ச்சி என்றொரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, சுத்த பொய்
புத்தமும் சமணமும் அதன் மிக கடுமையான கட்டுபாடுகளாலும், வாழ்விற்கு ஒத்துவரா தத்துவங்களாலும் வீழ்ச்சியுற்றன
கம்யூனிச வீழ்ச்சி போல, வாழ்க்கைக்கும் மானிட சிந்தனைக்கும் ஒத்துவராத சிந்தனையால் வீழ்ந்தன
இந்துமதம் அதன் மிகபெரும் சுதந்திரமான அணுகுமுறையால் மீண்டெழுந்து நிற்கின்றது
திருமணம், துறவு, உணவு என பல்வேறு விஷயங்களில் கடும் கட்டுபாட்டை விதித்தது புத்தமும் சமணமும்
ஆனால் வாழ்வினை மிக சுதந்திரமாக வாழ சொன்னது இந்துமதம், வாழ்விலே இறைவனை காண சொன்னது
முடியினை ஒவ்வொன்றாக ரத்தம் வர வர பிடுங்கி புத்தமதம் மொட்டை அடிக்க சொன்னபொழுது, நீண்ட மயிரை வளர்க்கலாம் அதிலும் துறவு இருக்கலாமென்றது இந்துமதம்
ராமனை போற்றியது ஆனால் தசரதனை திட்டவில்லை
காடு சென்ற முனிவருக்கும் மனைவியர் இருக்க சம்மதித்தது இந்துமதம்
பன்றியினை உண்டாலும் கொழுப்பு ஏறாமல் பார்த்துகொள் என கனிவாக போதித்தது இந்துமதம்
அது மீண்டெழுந்தது இந்த மிக மென்மையான அணுகுமுறையிலே அன்றி ஆரிய சூழ்ச்சியில் அல்ல
புத்தமதம் சாதியினை ஒழிக்கும் என இங்கு கத்தும் பலர், அம்பேத்கர் என கொடிபிடிக்கும் பலர் எத்தனைபேர் பூரண புத்தமதத்துகாரனாக, ஆசையினை ஒழித்து அசைவத்தை வெறுத்து புத்தன் காட்டிய வழியில் பிச்சை எடுத்து வாழ தயார்?
ஒருவனுமில்லை
சும்மா புத்தன் வழி சாதியினை ஒழிக்கும் என சொல்லிகொள்வது. அம்பேத்கார் அவ்வழியில் ஒழித்தாரா? இல்லை இவர்கள் மொட்டை அடித்து பிச்சைகார கோலம் பூண்டு புத்தன் வழியில் சாதியினை ஒழிக்க தயாரா என்றால் ஒருபதிலும் ஒருவனிடம் இருந்தும் வராது [ October 17, 2018 ]