இன்றைய துளிகள் …
இந்திரா காந்தி கருணாநிதி மோதலுக்கு பின் தென்னகம் சுவாரஸ்யமாக பார்த்துகொண்டிருப்பது கிரண்பேடி நாராயணசாமி மோதல்
கிரண்பேடி இந்திரா போல் அட்டகாசமாக ஆடுகின்றார், ஆனால் கலைஞர் அக்காலத்தில் காட்டிய சுவாரஸ்யம் நாராயணசாமியிடம் மிஸ்ஸிங்
*******
பிராமண எதிர்ப்பும் இந்துமத எதிர்ப்பும் இல்லை என்றால் திமுகவின் அரசியல் இல்லை, அந்த திமுகவினை எதிர்க்காமல் அதிமுக அரசியல் இல்லை
காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கொடுத்தால் கன்னட அரசியல் இல்லை, அதை கட்டிபோடும் வரைதான் அங்கு அரசியல்வாதி பிழைக்க முடியும்
ஜெருசலலேமை காட்டாமல் இஸ்ரேல் அரசியல் இல்லை, ராமர்கோவிலை விட்டால் பாஜக அரசியல் இல்லை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல்
அப்படி பாகிஸ்தானுக்கு காஷ்மீர் , அதை காட்டியே 60 ஆண்டுகால அரசியலை செய்துவிட்டது
காஷ்மீர் சிக்கல் தீர்ந்தால் அங்கு அரசியல் செய்ய ஒன்றுமில்லை என்பதால் அது தீரவே கூடாது என்பதில் அதற்கு அவ்வளவு ஆர்வம்
எல்லாமே உலகில் அரசியல் அதில் அப்பாவி மக்கள் பலியாவதுதான் சோகம்..
******
மத்திய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு : நடிகர் சங்கம்
இவர்கள் என்ன ஆதரவு கொடுப்பது?
அர்ஜூனையும் விஜயகாந்தையும் மணிரத்தினத்தின் வழிகாட்டலில் எல்லைக்கு அனுப்ப போகின்றார்களா?
ராணுவ வீரர்களுக்கு ஒரு பைசா நிதி அனுப்பியதாகவும் தெரியவில்லை, அப்படி செய்ய போவதாக சொல்லவுமில்லை
முதலில் நடிகர் சங்கம் ஒழுங்காக வருமானவரி கட்டட்டும் அதுவே இக்கூட்டம் நாட்டிற்கு செய்யும் சேவை
ஒரு நடிகனாவது கருப்பு பணத்தில் இருந்தாவது ராணுவ வீரர்களுக்கு நிதி கொடுத்ததாக தெரியவில்லை
அதில் இந்தி திரையுலகம பரவாயில்லை அமிதாப் முதல் அமீர்கான் வரை தேசபற்றோடு கொடுக்கின்றார்கள், இங்கே சுத்த மோசம்
இதில் ஏதோ நாளையே ராணுவத்தில் துப்பாக்கி ஏந்த விஷாலும், கார்த்தியும் கிளம்ப போவது போல ஆதரவு கொடுக்கின்றார்களாம்
அவர்களை பற்றி அவர்களுக்கே தெரிந்திருக்கின்றது.
******
கமலஹாசன் திமுகவினை விமர்சித்தால் பதிலுக்கு அவரை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம்
ஆனால் கமலஹாசனின் மகள்களின் படங்களை எடுத்து போட்டு அவரை கலாய்ப்பது எவ்வகையிலும் நியாயமாகாது
கலைஞர் கருணாநிதி இதை எல்லாம் விரும்பும் நபரல்ல, நிச்சயம் ஸ்டாலின் மாபெரும் தவறு செய்கின்றார்
திமுக என்றாலே ஒரு காலத்தில் நாகரீகமானோர் நெளிந்தார்கள் அந்த அளவு தரக்குறைவான விமர்சனங்களை அது கொண்டிருந்தது,
அது கொஞ்சமாலமாக மாறியிருந்தது
மறுபடியும் அந்த சாக்கடை காலங்களுக்கு திமுக திரும்பியேவிட்டது
திமுகவிலும் பெண்கள் உண்டு, திமுகவிற்கும் பெண்கள் வாக்கு வேண்டும் என்ற சிந்தனை கொஞ்சமும் அவர்களுக்கு இல்லை
*****
இஸ்லாமிற்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் : செய்தி
அவர் இஸ்லாமிற்கு மாறி நுனிதோலை வெட்டுவது விஷயமல்ல, மொத்த குடும்பத்திற்கும் நாக்கின் நுனியினை வெட்டிவிட்டால் நல்லது
******
‘‘காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை அசாம் மாநிலத்துக்கு வர விடமாட்டோம்’’ – அமித் ஷா பேச்சு
ஏற்கனவே காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டோம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் கிழித்துவிட்டோம் என கொக்கரித்துகொண்டிருந்ததற்குத்தான் வாங்கி கட்டியிருக்கின்றோம்
இனி அசாமிலுமா?
அசாம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது, இவர்களின் இம்சை பேச்சும் வெற்று அரசியல் கூச்சலும் ராணுவ வீரர்கள் தலையில்தான் விழுகின்றது