இன்றைய துளிகள் (1)

“ஏ ஏ சின்னமச்சான்..

என்ன புள்ள‌..

சிவத்த மச்சான்..

சொல்லு புள்ள‌..

ஊருக்குள்ள உங்கள பேசுறாக, விதவிதமா சொல்லி ஏசுறாக…”

******

எத்தனை கட்சியும், யாருடனும் கூட்டணி வைக்கட்டும். சாதனை வேதனை சாதி மதம் இன்னபிற விஷயங்களை எல்லாம் கணக்கிடட்டும் பேசட்டும்

உண்மையில் ஜெயிக்க கூடிய கூட்டணி எது தெரியுமா?

இந்த கூட்டணிதான்…

*******

திரை மறைவில் டி.ஆர், சரத்குமார், கார்த்திக் இன்னும் பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கலாம்

குண்டு கல்யாணம், விந்தியா, சிம்ரன் போன்றவர்களும் அதில் உண்டு

அரசியல் பஞ்சாயத்து சவுண்ட் பார்ட்டிகளை எல்லாம் கட்சிகள் வலைவீசி தேடிவரும் நேரமிது

என்ன இருந்தாலும் முண்ணணி இடம் டி.ஆருக்கு என்கின்றது செய்திகள்

ஆக எல்லோரும் அட்வான்ஸ் வாங்கி கொண்டு நகையினை பாலிஸ் போட்டு கொண்டிருக்கின்றார்கள்….

******

ரவுடி பேபி பாடலின் வெற்றி எதை சொல்கின்றது என்றால் எல்.ஆர் ஈஸ்வரியின் குரல் சாயலுக்கும், சந்திரபாபுவின் “குங்குமபூவே..” சாயலுக்கும் ஒருநாளும் தமிழகத்தில் மவுசு குறைய போவதே இல்லை..

*****

“ஏம்பா.. தலைவி குஷ்புக்கு எந்த தொகுதின்னு சீக்கிரமா சொல்லி பஞ்சாயத்த முடிங்கப்பா.. வெயில் ஏறுதுல்ல..”