போரில் விருப்பமா?
“மூடனே உனக்கு போரில் விருப்பமா? வெறியனே அமைதி வேண்டாமா? இம்ரான்கான் எவ்வளவு நல்லவர் என தெரியுமா?” என ஏக குரல்கள்
ஒன்று சொல்லிகொள்கின்றோம்
“நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே முடிவெடுக்கின்றான்” என்றார் மாவோ
இந்த சூழலுக்கு நிச்சயம் காரணம் பாகிஸ்தானே, இந்தியாவில் தாக்குதல் நடத்தும் அத்தனை எதிரிகளும் அங்கேதான் இருக்கின்றார்கள்
அவர்களுக்கு பாதபூஜை முதல் எல்லா வசதிகளையும் செய்து அவர்களை சிங்கம் தன் குட்டிகளை பார்த்துகொள்வது போல் பார்த்து கொள்கின்றது
அவர்கள் எல்லா தீவிரவாதிகளையும் ஒழித்தால் அவர்களிடம் பேசலாம்
அவர்களும் ஒழிக்கமாட்டார்கள், நாம் ஒழித்தாலும் சண்டைக்கு வருவார்கள் என்றால் அவர்களிடம் என்ன பேசுவது?
அதுவும் எத்தனையோ முறை நாம் நீட்டிய உறவு கரங்களை எல்லாம் வஞ்சகமாக கத்தியால் கீறிவிட்டவர்களிடம் என்ன பேசுவது?
மூடனுக்கும் திருந்தாதவனுக்கும் பிரம்பே சரி என்பது பழமொழி